இறந்த காந்தியார் நம் காந்தியார் – பெரியார்

சென்ற மாநாட்டிற்குப்பின் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் முதன்மையாகப் பேசப்படவேண்டியது காந்தியாரின் மறைவைக் குறித்தாகும். காந்தியார் உயிரோடிருந்த வரை அவருடைய போக்கைப் பெரும் அளவுக்குக் கண்டித்துவந்த எனக்கு காந்தியார் மறைவுக்குத் துக்கப்படவோ, அவரது மறைவுக்குப்பின் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசவோ என்ன உரிமை உண்டென்று சிலர் கேட்கலாம். சிலர், காங்கிரஸ்காரரின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக்கொள்ளவே நான் இவ்விதம் சூழ்ச்சி செய்வதாகவும் கருதி இருக்கலாம். ஆனால், தோழர்களே! இவை உண்மையல்ல. காந்தியார் மறைவுக்காக எந்தக் காங்கிரஸ்காரர். துக்கப்பட்டா ர் ? அழுதார் ?  வேதனைப்பட்டார்கள்  ?காங்கிரஸ்காரர்கள் பண்டிகை கொண்டாடினார்கள்; காங்கிரஸ் முக்கியஸ்கராக இருந்த பார்ப்பனர்கள் இனிப்பு வழங்கினார்கள்.

Gandhi_sepia2எனக்கு உண்மையிலேயே இப்பொழுதும் துக்கம் மேலிடுகிறது. காந்தியார் மறைவுக்கு அனுதாபப்பட மற்றவர்களைக் காட்டிலும் அதிகத் துக்கப்பட வேறு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக காங்கிரஸ்காரர்கள் பலரும், பார்ப்பனர்களும் கருதி இருக்கிற காந்தியார் வேறு  இறந்த காந்தியார் வேறு என்று நான் கருதுகிறேன். இருந்த காந்தியார் ஆரியர் காந்தியார் ஆரியரால் உண்டாக்கப்பட்ட காந்தியார்; நம் எதிரிகளின் காந்தியார். ஆனால் இறந்த காந்தியார் நம் காந்தியார்; ஆரியம் அழிந்துவிடுமே எனப் பயந்து ஆரியரால் கொல்லப்பட்ட கொலையுண்ட காந்தியார். அதனால்தான், நாம் மற்றவர்களுக்கும் மேலாகத் துக்கப்படுகிறோம். அதனால்தான் மற்றவர்களைவிட நமக்குத்தான் அவர் மறைவுக்காகத் துக்கப்படவும் உரிமை உண்டு என்றும் கூறிக்கொள்கிறோம். ஒருவர் தம் மறைவு காலத்தில் எந்த நிலையில் இருக்கிறாரோ அதைப் பொறுத்துத்தான் அவருடைய மறைவுக்குத் துக்கப்படுபவர்களும், சந்தோஷப்படுபவர்களும் அமைவார்கள். உதாரணமாக நான், காங்கிரஸ் இராமசாமியாக ஒரு காலத்திலும், சுயமரியாதை இராமசாமியாக ஒரு காலத்திலும், திராவிடர் கழக இராமசாமியாக தற்காலத்திலும் இருந்துவருகிறேன். காங்கிரஸ் இராமசாமியாக இருந்த காலத்தில் இறந்திருந்தால் சுதேசமித்திரன்’ ஆசிரியர் உள்பட, இந்து ஆசிரியர் உள்பட் பல காங்கிரஸ்காரர்களும், அய்யர், அய்யங்காரர்களும் துக்கம் கொண்டாடியிருப்பார்கள். ஒரு சில சுயமரியாதைக்காரப் பார்ப்பனர் தவிர்த்த, மற்ற பார்ப்பனர்கள், வைதீகர்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டபடி இருப்பார்கள். ஆனால், இன்று மறைய நேர்ந்தாலோ திராவிடர்கள் அனைவரும் துக்கம் கொண்டாடலாம் என்று கருதுகிறேன்.இதேபோல், காந்தியாரும் தம் மறைவின்போது திராவிடர் கழகக் கொள்கைகளை ஒப்புக்கொண்ட காந்தியாராகத்தான் இறந்தாரே ஒழிய, ஆரியதர்மத்தை ஒப்புக்கொண்ட காந்தியாராக மறையவில்லை. இந்து மத தர்ம அநீதியைக் கண்டிக்கப் புகுந்ததால், அதற்கான பயனை அடைந்தார். சூத்திரன் தலையெடுத்தால் பார்ப்பானுக்கு ஆபத்து என்ற மனுதர்ம விதிப்படி, அவர் பார்ப்பனனால் கொல்லப்பட்டார். இராமாயணக் கதையில் சம்புகன் அடைந்த கதியை அவர் அடைந்தார். சம்புகன் கொல்லப்பட்டதற்கு ஆரியப் பார்ப்பனர்கள் அகமகிழ்ந்ததாக-இறந்த பார்ப்பனர்களெல்லாம் உயிர்த்தெழுந்ததாகக் கதையில் காணப்படுகிறது. காந்தியார் கொல்லப்பட்டமைக்குப் பார்ப்பனர்கள் மிட்டாய் வழங்கியதை நாம் நேராகப் பார்த்தோம். சாந்தியார் மறைவுக்குப் பார்ப்பனர்களே காரணம் என்று வடநாட்டில் பார்ப்பனர்களின் வீடுகள் சூறையாடப்பட்டதையும், பர்ப்பனத் தாய்மார்கள் அவமானப் படுத்தப்பட்டதையும், பார்ப்பனர்கள் தங்க இடம் இன்றி ஒடித் தவித்ததையும் நாம் பத்திரிக்கையில் படித்தோம். அதற்கு நஷ்டஈடாக பம்பாய் மாகாண சர்க்கார் ஒவ்வொரு பார்ப்பனனுக்கும் ரூ. 2000 இனாமாகவும் ரூ. 25,000/- வரை ரொக்கக் கடனும் கொடுத்துதவியதாகவும் நாம் பத்திரிக்கையில் பார்க்கிறோம். இங்கு பார்ப்பனர்களுக்கு அத்தகைய கேடு நேரவில்லை. இதற்கு நம் கழகம்தான் காரணமே யொழிய காந்தியார் மறைவுக்குத் துக்கப்படுபவர் இந்நாட்டில் இல்லாமல் போனதால் அல்ல.

(துத்துக்குடியில் 8,9 5-1948-ல் நடத்த மாகாண மாநாட்டில் தலைமையுரை – விடுதலை 18-5-1948)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s