ஏன் காங்கிரசிலிருந்து வெளியேறினேன் ? – பெரியார்

Periyar_with_Rajajiபேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! வ. வே. சு. அய்யர் என்ற பார்ப்பனர் சேரமாதேவி என்ற இடத்தில் ஒரு குரு குலத்தை வைத்து நடத்திவந்தார். அதற்கு தமிழ்நாடு காங்கிரசிலிருந்து 2 தடவையில் ரூ.10,000 கொடுப்பதாகச் சொல்லி முதல் முறையாக ரூ.5000-த்தை அப்போது தலைவனாய் இருந்த நான் கொடுத்தேன். அதோடு, பொதுமக்களிடம் ரூ.10,000க்குமேல் சேர்ந்தது. இவைகளை வைத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட குருகுலத்தில்,பார்ப்பான் பிள்ளைகளுக்கு உப்புமாவும் நம்மவர் பிள்ளைகளுக்குப் பழைய சோறும், தனி இடத்தில் (வெளியில்) சாப்பாடும் தரப்பட்டன. அவர்கள் பிள்ளைகளுக்கு வேதபாராயணம்; நம்மவர்களுக்கு தேவாரம், திருவாசகம் சொல்லிக்கொடுத்துக் கொண்டும்; நம்மவர்களுக்குத் தண்ணி, குடிக்கத் தனிப்பானை அவர்களுக்கு வேறு பானை என்ற நிலையில் நடத்திவந்தார்கள்.

அந்தக் குருகுலத்திலே படிப்பதற்காக அனுப்பப்பட்ட ஒமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களின் மகன், பார்ப்பனப் பிள்ளைகளுக்காக வைக்கப்பட்டிருந்த பானையில் தண்ணிச் மோந்து குடித்துவிட்டதற்காக அவன் மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். இது என் காதுக்கு வந்தது. நான் ஆச்சாரியாரிடம் சொன்னேன். அவர் கோபித்துக் கொண்டு, வ. வே. சு. அய்யரைக் கூப்பிட்டு, இந்த மாதிரி செய்வது சுத்தத் தப்பு’ என்று அவரைக் கண்டித்தார். அதற்கு வ. வே. சு. அய்யர் அவர்கள், வைதிகர்கள் வசிக்கிற இடத்தில் இதை ஆரம்பித்துவிட்டேன்; கொஞ்சங் கொஞ்சமாக சரி செய்துவிடுகிறேன்’ என்றார். நானும் ஒப்புக்கொண்டேன்.

பிறகு வ. வே. சு. அய்யர் பாக்கி 5000த்தையும் கேட்டார். காரியம் முடியட்டும்; கொடுக்கிறேன்’ என்று கூறினேன். கோபித்துக்கொண்டு பேய்விட்டார்.

நாங்கள் 5, 6 பேர் இருந்துகொண்டு. ஜஸ்டிஸ் கட்சியை எதிர்த்துக்கொண்டு, காங்கிரஸ்க்குச் செல்வாக்குத் தேடித் தந்து கொண்டிருக்கிறோம்; இப்படியெல்லாம் நடத்தால் என்ன நியாயம்? என்று கேட்டேன். ஆச்சாரியாரும் என் பக்கம் இருந்தார். சென்னையிலிருந்த காங்கிரஸ் கமிட்டியை ஈரோட்டில் எனது வீட்டிற்கு மாற்றியதிலிருந்தே ஆச்சாரியார் மீது மனக்கசப்புக்கொண்ட பார்ப்பனர்கள் இந்தச் சமயத்தில் வெளிப்படையாகவே ஆச்சாரியாரை எதிர்த்தார்கள்.

வ. வே. சு. அய்யருக்காக கஸ்தூரி ரெங்க அய்யங்காரும், சுதேசமித்திரன்’ ரெங்கசாமி அய்யங்காரும், எஸ். சீனிவாசய்யங்காரும், சத்தியமூர்த்தியும் மற்றும் பல பார்ப்பனர்களும் குருகுலத்தை ஆதரித்து எனக்கு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தார்கள். இந்தக் காரியங்களினால் பயந்துவிட்ட ஆச்சரியார் தானும் அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டதுமல்லாமல், டாக்டர் வரதராஜுலு நாயுடுவின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டு வந்தார். நான் ஆசிசாரியார் பக்கம் இருந்தாலும், வரதராஜுலு சென்னை பார்ப்பனர் பக்கம் இருந்து வந்தாலும் நான் ஆச்சாரியார் தீர்மானத்தை எதிர்த்தேன். எனக்குச் சாதகமாக திரு. வி. க., ஓமாந் தூர் இராமசாமி ரெட்டியார், தங்க பெருமகள் பிள்ளை, எஸ். இராமநாதன் முதலியவர்கள் ஒட்டுச்செய்தார்கள். இராஜன், சந்தானம், வரதாச்சாரி, கிருஷ்ணமாச்சாரி, ஆலாசியம், டாக்டர். சாஸ் திரி முதலிய பார்ப்பனர்கள் அவர் பக்கம் ஒட்டுச்செய்தார்கள். எங்களுக்கு 12 ஒட்டும் அவர்களுக்கு 7 ஓட்டும் கிடைத்தன. அவர்களின் தீர்மானம் தோல்வியுற்றது. உடனே ஆசாரியார் பர்ப்பனர்கள் 7 பேரிடத்திலும் கையெழுத்து வாங்கி இராஜிநாமாக் கடிதம் கொடுத்தார். நான் வேண்டாம் என்று கூறினேன்; முடியாது என்று இராஜிநாமாவே கொடுத்தார்.

அதே சாக்கில் மெஜாரிட்டியாக இருந்த நாங்கள், காங்கிரஸ் பொது ஸ்தாபான மாகும். ஆகவே, காங்கிரசைப் பொறுத்தமட்டிலாவது சாதிபேதம் இருக்கக் கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம்.

பார்ப்பனர்கள் கட்டுப்பாடாக வெளியேறியது பற்றி காந்தியாருக்குக் கடிதம் எழுதி, சாதி ஒழியக்கூடாது என்று சொல்லுவது நியாயமா’ என்று கேட்டோம். காந்தியார் அதை ஆச்சாரியாருக்கு அனுப்பினார். அவர் அதை டாக்டர். ராஜனுக்கு அனுப்பினார். அவர் காந்திக்குப் பதில் எழுதினார்.

உடனே காந்தியார், சாதி ஒழியக் கூடாது என்பதல்ல அவர்கள் கருத்து ; அந்த மாதிரித் தீர்மானம் போடுவது அவர்கள் மனச்சாட்சியை உறுத்துகிறது; ஆகவேதான் எதிர்த்தார்கள் ‘ என்று எங்களுக்குப் பதில் எழுதிவிட்டார். அப்போதே எங்களுக்குக் காங்கிரசின்மேல் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.

அதற்கப்புறம், பதவிக்குப் போவதற்காக வங்காள தாஸ் (C. R. Das) அவர்களைத் தலைவராகக் கொண்டு சுயராஜ்யக் கட்சி’யை ஆரம்பித்தார்கள். சத்தியமூர்த்தி அய்யரும், சீனிவாச அய்யங்காரும், ரெங்கசாமி அய்யங்காரும் அதில் தீவிரமாய்ப் பங்கெடுத்து வேலை செய்தார்கள். பதவிக்குப் போவதற்காகக் காங்கிரசின் பெயரைக் கூறி அதன் செல்வாக்கைப் பயன்படுத்திப்போக நினைத்ததைக் கண்டித்தோம். ஆனால் காத்தியார், சட்டசபைக்குப் போகிறவர்கள் போகட்டும்; வெளியே இருந்து வேலை செய்பவர்கள் செய்யட்டும் என்று பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக அனுமதி கொடுத் து விட்டர், நாங்கள் வாதாடிப் பார்த்தோம். அதிலும் எங்களுக்குச் சாதகம் கிடைக்கவில்லை.

திரு. வி. க. தலைமையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாகாண மாநாட்டில், விஷய ஆலோசனைக் கமிட்டியில், சுயராஜ்யக் கட்சியை எதிர்க்கக்கூடாது; ஒத்துழையாதார் தேர்தலுக்கு நிற்பதில்லை என்றும் 100-க்கு 50 பேர்களுக்குக் குறையாமல் பார்ப்பனரல்லாதாருக்கு ஸ்தானம் கொடுக்கவேண்டும்’ என்றும் தீர்மானம் கொண்டுவந்தேன். ஆச்சாரியார், சீனுவாசய்யங்கார், ரெங்கசாமி அய்யங்கார், சதிதியமூர்த்தி போன்றவர்கள், வேண்டாம்; இத் தீர்மானம் கூடவே கூடாது’ என்று சொன்னார்கள். எனக்கு மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்று கண்ட அய்யர், திரு. வி. க.வையும், நாயுடுவையும் எப்படியோ தங்கள்பக்கம் இழுத்துக் கொண்டார்கள்.

கமிட்டிக்கு அதிகாரம் கொடுக்கவிட்டதால் அதைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று சொன்னார்கள். நான் முடியாது என்றேன்.

அப்புறம் 30 பேர்களிடத்தில் கையெழுத்து வாங்கினால் மாநாட்டில் தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்றார்கள். ஆனால் 50 பேர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொடுத் தோம். மாநாட்டுத் தலைவராக இருந்த திரு. வி. க. பொதுஜன நன்மைக்காக இந்தத் தீர்மானத்தை அனுமதிக்க முடியாது’ என்று பார்ப்பனருக்குப் பயந்து கூறிவிட்டார்.

புனர் ஆலோசனை செய்யும்படி வாதாடிப்பதிதேன்; மறுத்துவிட்டார். ஆதலால், அன்றைக்கே-அதே விநாடியில் நான் காங்கிரசிலிருந்து வெளியேறினேன்.

(மணப்பாறையில், 27.3.1950-ல் சொற்பொழிவு-விடுதலை 30-3-1950)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s