காந்தியார் மாற்றமும், கொலையும் – பெரியார்

1369380138_73270தோழர்களே! கதத்திரம் வந்துவிட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டு வெள்ளையனும் போய் விட்டதாகக் கூறப்பட்ட அந்தத் தினத்திலிருந்து, காந்தியாரின் எண்ணங்களில் பல குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டு வந்ததை நான் கண்டேன். காங்கிரஸ்காரர்கள் விரும்பியபடி சுயராஜ்யம் கிடைக்குமானால், நம் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் என்னென்ன கேடுகள் விளையக்கூடும் என்று நான் இடைவிடாது கூறிவந்தேனோ, அக் கேடுகள் வினைய நேரிட்டதை உணர்ந்து, காந்தியார் அதை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்: அக்கேடுகளையும் அனுபவிக்க ஆரம்பித்தார் அவசரப்பட்டு சுயராஜ்யம் கேட்டது எங்கு ஆபத்தாக முடியுமோ என்று கவலைகொள்ள ஆரம்பித்தார் : தமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று தாம் கருதிவந்தவர்களில் பெரும்பாலோரைப் பற்றி, நான் என்ன மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டிருந்தேனோ அதேபோல அவரும், அவர்களைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தார் ; சுருங்கக் கூறவேண்டுமானால், உண்மையை உணர ஆரம்பித்தார்; தாம் செய்த பல தவறுகளை உணர ஆரம்பித்தார். அத் தவறுதல்களைத் திருத்திக்கொள்ளவும் ஆரம்பித்தார் என்று கூறலாம்.

அத் திருத்தங்களைச் செய்யப் புகுந் தறுவாயில், தமது எண்ணங்களுக்கேற்பச் செயலாற்ற முற்பட்ட தறுவாயில், அவரது முற்போக்கு எண்ணங்களால் தமக்குக் கேடு சூழும் என்று அஞ்சிய சுயநல சோம்பேறிக் கூட்டத்தாரால் கொலை செய்யப்பட்டார். இதுதான் நமக்கு மனவேதனையாக இருக்கிறது. அப்படிப்பட்ட துர்மரணத்திற்கு மட்டும் அவர் ஆளாகாமல் இருந்திருப்பாரேயானால், இதற்குள்ளாக இந்நாட்டில் எத்தனையோ புரட்சிகரமான காரியங்களை அவர் செய்து இருப்பார். இன்று ஏற்பட்டுள்ள கொள்ளைகள், கொடுமைகள், பல அட்டுழியங்கள், அநீதிகள் இவற்றையெல்லாம் நிறுத்தியிருப்பார் ; அல்லது, அடியோடு நிறுத்த முடியாவிட்டாலும், இவற்றிற்கெல்லாம் சரியான பரிகாரமாவது தேடியிருப்பார். குற்றம் பல கண்டதால் காங்கிரஸின் அமைப்பு முறையையே மாற்றியமைக்க ஆரம்பித்தார். நமது கொள்கைகளை நேர்முகமாக ஆதரிக்காவிட்டாலும், மறைமுகமாகவாவது ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்; அதுவும், மறுபடியும் நான் அவருடைய சிஷ்யனாக ஆக வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் ஆசை கொள்ளும் அளவுக்கு ஆதரிக்க ஆரம்பித்தார். அப்படி நான் ஏங்கியிருந்த சந்தர்ப்பத்தில் அவர் கொல்லப்பட நேர்ந்ததுதான் எனக்கு அளவிடற்கரிய துக்கம் உண்டாகக் காரணமாயமைந்தது.

அவர் நமது கொள்கையை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார் என்பதற்குப் பல காரணங்கள் காட்டமுடியும் என்றாலும், உதாரணமாக ஒன்றிரண்டு காரணங்களை மட்டும் இங்கு கூற ஆசைப்படுகிறேன். காங்கிரஸ்காரர்கள் தமது தியாகத்திற்குக் கூலி கேட்க ஆரம்பித்துவிட்டனர் பதவி வேட்டை துவங்கிவிட்டனர்; காங்கிரஸ் சட்டசபை மெம்பர்கள் நீதி நிர்வாகத்தில் அடிக்கடி தலையிடுகின்றனர்’ என்றெல்லாம் குற்றம் கூறினார். இதையெல்லாம் தாமாகக் கூறுவது அழகாக இருக்காதென்று கருதி, தமது நம்பிக்கைக்கும் நன் மதிப்புக்குமுரிய தோழர் கொண்டா வெங்கடப்பையா அவர்களால் எழுதப்பட்ட கடிதத்தை அப்படியே வெளியிட்டு, அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் யாவற்றையும் தாம் உண்மையென்றே நம்புவதாகவும், மேற்படி குற்றங்களுக்காக ஒவ்வொரு காங்கிரஸ் காரனும் அவமானப்படவேண்டியது அவசியமென்றும் குறிப்பிட்டிருந்தார். இவைதான்நான் காங்கிரஸ் பிரமுகர்களைப்பற்றி அடிக்கடி கூறிவந்த கருத்துக்களாகும்.

இங்கு திராவிடர் கழகம் வலுப்பெற்று வருவது கண்டு பொறாமை கொண்ட சில பார்ப்பனர்கள் காந்தியாரிடம் காவடி தூக்கிச் சென்றனர். தென்னாட்டில் திராவிட கழகம் என்றொரு கழகம் வளர்ந்து வருகிறதென்றும், அதைக் கண்டு காங்கிரஸ் மந்திரிகளே பயப் படுகிறார்கள் என்றும், காங்கிரஸ் ஆட்சியில் தம் மக்களுக்குப் பள்ளிக்கூடங்களில் படிக்க இடம் கிடைப்பது கூடக் கஷ்டமாக இருக்கிறதென்றும் கூறினார்கள். அதைக் கேட்ட காந்தியார் கூறிய பதிலில்தான், நான் கூறிய மனமாற்றம் இருக்கிறது. கவனித்துப் பாருங்கள்: என்னருமை பிராமணத் தோழர்களே! நீங்கள் கடவுளோடு நேர்தொடர்பு வைத்துக் கொண்டுள்ளவர்களாயிற்றே! அதிலும் மகா புதிதிசாலிகளாயிற்றே! அப்படியிருக்க, உங்களுக்கு எதற்குப் படிப்பு வேண்டும்! கடவுளை நம்பி, சதா கடவுள் பணிசெய்து கொண்டிருங்களேன்! படியாத முட்டாள்களான அவர்களுக்குத் (திராவிடர் களுக்கு) தானே படிப்பு அவசியம்; அவர்கள் படிக்கட்டுமே! உங்கள் பிள்ளைகளுக்கு இடமில்லாமற் போனால் வருத்தப்படாதீர்கள். உங்கள் விகிதாச்சார  இடங்களைக்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்காக விட்டுக்கொடுத்து உதவுங்கள்’ என்று அவர் கூறினார். இதைத்தானே நாமும்  இன்றுவரை கூறிவந்தோம். எனவேதான், அவரது மறைவால் நாம் வருத்தப்பட நேரிட்டதே ஒழிய, அவரது பேரைச் சொல்லி உங்களது நன்மதிப்பைப் பெறுவதற்காக அல்ல என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்தவே  இவ்வளவும் கூற நேரிட்டது.

(சிதம்பரத்தில், 29-9-1948-ல் சொற்பொழிவு- விடுதலை 3-10-1948)


Speech at Prayer Meeting (11 Jan 1948) New Delhi 

Konda Venkatappayya Desha Bhakta Konda Venkatappaiah or Konda Venkatappayya (Telugu: కొండా వెంకటప్పయ్య) (1866–1948)

Desha Bhakta Konda Venkatappaiah or Konda Venkatappayya (Telugu: కొండా వెంకటప్పయ్య) (1866–1948)

I have to refer to a painful matter. It concerns Andhra. I have two letters from Andhra. One of them is from an elderly gentleman  whom I know and who does not write as a rule. The other is from a young man whom I do not know. There is no use telling you  the names because you do not know them. Both say that after August 15, all fear  has  vanished  from  people’s  minds.  The  British  who  were feared are gone. There is no fear of punishment and also no fear of God. In Andhra people are of robust health and when they feel that  they are free they lose all self-control. Now they do nothing but what will further their self-interest. One of the correspondents bewails the fact that all the sacrifices made by the Congress to see India free has  resulted  in  this.  The  Congress  today  is  falling.  Everyone  in  the Congress today wants to become an M. L. A. Those who succeed do not   work  for  the   country  but   only  for  themselves.   An  M.  L.  A.  gets quite a  sizable   salary—I  do   not   recollect  how  much—but  it  is   quite adequate   for  one’s  necessities.   The   correspondent  says  that  the M. L. As nevertheless are corrupt and they harass civil servants   and   try  to browbeat   them  into  doing   their  bidding.   In   this   way   both  suffer morally—  civil  servants  as  well  as  those  who  call  themselves  our representatives. The elder correspondent suggests that I should go and live in Andhra and see how things are. But  I  have  lived  not  only among Andhras but among all classes of people. To me people of every province are Indians even if they speak different languages. If someone says that he belongs to Andhra and has nothing to do with the rest of the country, I too shall have nothing to do with him. He says the rot is spreading amongst us. The more people we return to the assemblies, the greater the amount of filth. The fewer there are the less filth there will be. He therefore suggests that we should reduce the number of M. L. A.s because they do not in any case represent the people. They go into the assemblies to serve their self-interest. They even try to  capture  the  Congress.  Then  there  are  others  who  call themselves Communists or Socialists. They also feel all-important and talk about capturing the whole of India. But who will control India?  Socialists and Communists and Congressmen are all Indians. Let us not say that India is ours. Let us rather say that we belong to India. If we make India our own, we must do so not to further our self-interest, not to enrich our relatives or to provide them jobs but to serve.


Speech at Prayer Meeting (12 Jan 1948) New Delhi

I told you yesterday of two letters from Andhra. One was from the  aged  friend,  no  other  than  Deshabhakta  Konda Venkatappayyagaru. I give here extracts from it:

The one great problem, apart from many other political and economic issues of a very complicated nature, is the moral degradation into which the men in Congress circles have fallen. I cannot say much about other provinces but in my province the conditions are very deplorable. The taste of political power turned their heads. Several of the M. L. A.s and M. L. C.s are following the policy of making hay while the sun shines, of making money by the use of influence, even to the extent of obstructing the administration of justice in the criminal courts presided over by magistrates. Even the District Collectors and other revenue officials do not feel free in the discharge of their duties on account of the frequent interference by the M. L. A.s and M. L. C.s on behalf of their partisans. A strict and honest officer cannot hold his position, for false reports are carried against him to the Ministers who easily lend their ears to these unprincipled self-seekers.

Swaraj was  the  only  all-absorbing  passion  which  goaded  men  and women to follow your leadership. But now that the goal had been reached, all moral restrictions have lost their power on most of the fighters in the great struggle, who are joining hands even with those who were sworn opponents of the  national  movement  and  who,  now,  for  their  personal  ends  enlist themselves as Congress members. The situation is growing intolerable every day with the result that the Congress as well as the Congress Government have come into disrepute.

The recent municipal elections in Andhra have proved how far and how fast the Congress is losing its hold upon the people. The municipal elections in the town of Guntur were suddenly ordered  to  be  stopped  by  an  urgent message from the Minister for Local Bodies (Madras) after every preparation was made for carrying on election. Only a nominated council was in power for, I believe, the last ten years or more and for nearly a year now the municipal administration has been in the hands of a commissioner. Now the talk prevails that the Government would soon nominate councillors to take charge of the municipal affairs of this town.

I, old, decrepit, with a broken leg, slowly limping on crutches within the walls of my house, have no axe to grind. I no doubt entertain certain strong views against some of the leading Congressmen in the two parties into which the members of the Provincial and District Congress Committees now stand divided. And I have made no secret of my views.

The factions in the Congress circles, the money-making activities of several of the M. L. A.s and M. L. C.s and the weakness of the Ministers have been creating a rebellious spirit among the people at large. The people have begun to say that the British Government was much better and they are even cursing the Congress.

Let the people of Andhra and the other provinces measure the words of this self-sacrificing servant of India. As he rightly says the corruption described by him is no monopoly of Andhra. He could only give first hand evidence about Andra. Let us beware.

The Hindustan Times  13-1-1948 Harijan 18-1-1948


LETTER TO KONDA VENKATAPPAYYA

NEW DELHI ,

January 19, 1948

MY DEAR DESHABHAKTA,

Your letter. What do we care what others say?

I forgot to mention your fracture. Are you permanently cured?

As you know the fast was broken yesterday.

Yours,

BAPU

Wikipage :: Desha Bhakta Konda Venkatappaiah

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s