காந்தியார் மறைவு பற்றி – பெரியார்

தோழர்களே!

இன்று இந்த ஸ்தானத்தில் இருக்கும் நான் முதலாவதாகப் பேசவேண்டியது பெரியார் காந்தியாரின் மறைவுபற்றி-கொலைபற்றி. பேசவேண்டியது, சம்பிரதாயப்படி மாத்திரம் அல்லாமல் உண்மைப்படியும், கடமைப்படியும் பேச வேண்டியதாகும். காந்தியார் மறைவு திராவிட நாட்டுக்கும், திராவிட மக்களுக்கும் மகத்தான நட்டமும், மாபெரும் ஏமாற்றமடையத்தக்க வாய்ப்புமாகும். காந்தியார் கொலை திராவிட மக்களின் எல்லையற்ற ஆத்திரமும், இரத்தக் கொதிப்பும், திடுக்கிடும்படியான விறுவிறுப்பையும் கொள்ளத்தக்க காரியமாகும். இதைச் சொல்லுகிறபோது என் மனம் பதைக்கிறது; கை நடுங்குகிறது; நா வறட்சியடைகிறது; இதயம் துடிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரை எப்படித்தான் கொல்ல, இப்படிப்பட்ட ஒரு பார்ப்பனர்க்கு எண்ணம் வந்தது, கை வந்தது என்பதை நினைத்தால் இராமாயணக் கதையில்வரும் ஒரு இடம்தான் சற்று அதை விளக்குகிறது.

Mahatma-gandhi_002அதாவது, சம்புகன் என்ற ஒரு சூத்திரன் பிரார்த்தனை (தபஸ்) செய்ததற்காக சூத்திரனுக்குத் தபசு செய்ய உரிமை இல்லை’ என்கின்ற காரணங் கற்பித்து பார்ப்ப களின் துண்டுதலின்மேல் இராமன் என்கின்ற ஒரு ஆரியனால் கண்டதுண்டமாக்கப் பட்டான் என்கின்ற இடம்தான் இக் கொலையின் காரணத்துக்குச் சிறிது விளக்கத்திற்குரிய தாகிறது. ஆகவே, காந்தியார் கொலையானது, ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு புதிய சம்பவமல்ல என்பதும் இது ஆரியர்-சூக்திரர் (திராவிடர்), அல்லது ஆரியர்-ஆரிய ரல்லாதவர் என்கின்ற இனப் போராட்ட முறை என்றும்; அதுவும் இந்துமதப் புராணத் தத்துவங்களைப் பின்பற்றியதுதான் என்றும் நிச்சயிக்க வேண்டியதாகிறது. காந்தியார் சம்புக இனத்தாராகவும், கொன்றவன் இராமன் இனத்தானாகவும்: இருந்ததுதான் இக் கொலைக்குக் காரணமே ஒழிய-மற்றபடி தனிப்பட்ட மக்கள்மீதோ, தனிப்பட்ட குணங்கள் மீதோ குறைகூறுவது பொருத்தமற்றதாகும்.

காந்தியார் மறைவை-நான் ஏன் திராவிட நாட்டுக்கு, திராவிட மக்களுக்கு எல்லை யற்ற நட்டம் என்று சொல்லுகிறேன். இப்படிச் சொல்லுவதன் மூலம் ஏதாவது இலாபம், நலம் அடையலாமென்கிற சமயோசித புத்தியாலா? இல்லவே இல்லை! ஒருக்காலும் இல்லை! இப்போது இப்படிச் சொல்லுவதால் எனக்கோ, நம் கழகத்துக்கோ எவ்வித தன்மையும் ஏற்படாது; நம்மவர்களிலேயே சிலர் என்னை வெறுக்கக்கூடும்; மற்றும், ஒரு கூட்டத்தார், அதுவும் செல்வாக்குள்ள ஒரு கூட்டத்தாரின் வெறுப்புக்குத்தான் நான் ஆளாக நேரிடும். பின்னை ஏன் சொல்லுகின்றேன் என்றால், என்னைப் போலவே காந்தியாரும் தாம் ஒரு சூத்திரன்’ என்பதை நன்றாய் உணர்ந்து கொண்டார்; இந்து மதம் திருத்த முடியாதது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்தியா, இந்தியர், இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை என்றும்; சிந்து நதியால் இந்தப் பெயர் ஏற்பட்ட தென்றும்; இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குக் கேடாக இருப்பது மத உணர்ச்சியே என்றும்; தீண்டாமை, ஹரிஜனன் என்பது இந்துமத உணர்ச்சி உள்ளவரை மாற்றமடைய முடியாதது என்றும் ; ஒரே கடவுள்தான் உண்டு-அதுதான் அல்லா காட்’ (God) ராம் என்றும்; குரான் இந்துக்கள் படிப்பதற்குரியதென்றும், அதைப் பாராயணம் செய்ய வேண்டுமென்றும்; இந்துக்கள் முஸ்லிம்களுக்கு மிக்க தீங்கு இழைத்துவிட்டார்கள் என்றும்; அவற்றைப் பரிகரிக்காமல் மேலால் ஒரு காரியம் செய்யத் தன்னால் அனுமதிக்க முடியாதென்றும் பச்சையாகக் கூற ஆரம்பித்து விட்டார்.

பார்ப்பனர்களின் உண்மையான தன்மையை நன்றாய் அறிந்து கொண்டார். தன் பெயரைச் சொல்லிப் பதவிக்கு வந்தவர்களையும், அவர்களின் அக்கிரமங்களை, கொள்ளைய, ஒழுக்க ஈனமான-நாணய ஈனமான காரியங்களை நன்றாய்தி தெரிந்துகொண்டார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், தான் பல தவறுகள் செய்துவிட்டதாகவும், அவற்றிற்குப் பரிகாரம் செய்யவேண்டியது மிகவும் அவசியம் என்றும் கருதிப் பரிகாரத்தில் பிரவேசித்தார். அப் பரிகாரமானது அவரால் நடைபெற்றே தீரும். அப்பொழுது திராவிடர் கழகக் கொள்கையும், திட்டமும்தான் இந்தியா முழுவதற்கும் ஏற்படவேண்டியதாகும். நமக்கும் சட்டப்படி சாஸ்திரப்படி, மதப்படி-சூத்திரப்பட்டம் ஒழியும் நம் நாடும் பிரிந்து நமக்குக் கிடைக்கும்; இதில் சந்தேகமில்லை. காந்தியார் திடீரென்று தமது பழைய கருத்துக்களிலிருந்து இப்படித் திரும்பியதற்குக் காரணம் பார்ப்பனர் தன்மையும், தனது முக்கிய சிஷ்யர்கள் யோக்கியதையும் அவருக்கு நன்றாய் விளங்கிவிட்டதுதான்.

அன்றியும், ‘இந்துக்கள் யாவரும் குரான் படியுங்கள்’ என்றதிலிருந்தும், தானும் குரான் படித்துக்கொண்டு ராம்-ரஹீம் (அல்லாம்) பஜனை செய்ததிலிருந்தும், மற்றவர்களையும் செய்யச் செய்ததிலிருந்தும்-சாதிமத சம்பந்தமாக அவர் அடைந்த மாற்றத்திற்கு அளவு காட்ட வேண்டுமா என்று கேட்கிறேன்.

தவிரவும், காத்தியார் விக்கிரக ஆராதனைக்கு மாத்திரம் குறை சொல்லாமல், கடவுள் என்பதை மனித உருவாக, வஸ்துவாக, ஒரு தனிப் பொருளாகக் கற்பித்துக்கொண்டு இருக்கிறவர்களுக்குப் படும்படியாக, எனக்கு கடவுள் ஒரு வஸ்துவாக-தனிப்பட்ட பண்டமாக இருக்கிரது எனப்தில் நம்பிக்கையில்லை (“I have no belief in personal God’) என்று ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சொல்லிவிட்டார். அதாவது, கடவுள் என்பதை நான் ஒரு செயலாக சக்தியாகக் கருதுகிறேனே ஒழிய, ஒரு மனிதன் செய்கை போலவோ, ஒரு ஜீவன் செய்கை போலவோ கருதவில்லை என்பதாகச் சொல்லிவிட்டார். இதற்கு இயற்கை நடப்புதான் கடவுள்’ என்பது பொருளாகும். இந்த எண்ணம் அணு அளவாவது மக்களுக்குள் வருமேயானால் கோவில், விக்கிரகம், உண்டைக் கட்டி படையல்; அவை களுக்குக் கலியாணம், உற்சவம் முதலியதான வழிகளில் பார்ப்பனர் பணம் பறிக்கும் தந்திரமும், சோம்பேறி வாழ்வும் அடியோடு நின்றுவிடும்; அப்புறம் மேல் உலக-கீழ் உலகப் பித்தலாட்டங்களும், அவற்றால் பார்ப்பனர்களுக்கு ஏற்படும் கொள்ளை வருவாய் களும் ஒழிந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால், பார்ப்பனியமே பட்டு அழிந்துவிடும். ஆகவே, தமக்கு மாத்திரம் அல்லாமல் இந்திய நாடு முழுவதுமே சமய, சமுதாயத் குறையில் ஏற்பட இருந்த புரட்சிகரமான அனேக மாறுதல்கள்தான் காந்தியார் பார்ப்பனரால் கொலை செய்யப்பட நேர்ந்ததற்குக் காரணம். அப்படிப்பட்ட மாறுதலை விரும்பும் நாம் அதற்காக மிகமிகத் துக்கமும் ஆயரமும் அடைகிறோம்.

(துத்துக்குடியில், 8,9-1948-ல் நடந்த18-வது மாகாண தி.க மாநாட்டில் தலைமை உரை – குடிஅரசு 155-1948)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s