காந்தியார் நினைவாக – பெரியார்

காந்தியாரின் ஞாபகார்த்தமாக இந்தியா தேசத்திற்கு காந்தி தேசம்’ என்று பெயரிடலாம் என்றும்; கிறிஸ்து ஆண்டு, முகம்மது ஆண்டு என்பதுபோல் ‘காந்தி ஆண்டு’ துவக்கலாம் என்றும் கிறிஸ்து மதத்தைப்போல், பவுத்த மதத்தைப்போல், ‘காந்தி மதம் ‘ என்ற ஒரு புது மதத்தைத் தோற்றுவிக்கலாம் என்றும் நான் யோசனை கூறியிருக்கிறேன்.

27ythydgandhitime_G_793274e

Walk in the Mahatma’s footsteps: An ispiration still. Photo: K.R. Deepak The Hindu

நமக்குத் தெரியாத கலியுக ஆண்டு, பசலி ஆண்டு, கிறிஸ்து ஆண்டு விவரம், தெளிவு கண்டுபிடிக்க முடியாத பிரபவ ஆண்டு முதலியவைகளை ஒப்புக் கொண்டு இருப்பதைவிட, நமக்குத் தெரிந்த ஒரு பெரியாரின் பேரால்-அதுவும் ஆயிரம் ஆண்டுகளாக இல்லாத ஒரு பெருமாறுதல் ஏற்பட ஆண்டு துவக்குவது எப்படித் தவறாகக் கருத முடியும் இந்த நாட்டுக்கு என்று ஒரு ஆண்டு வேண்டாமா அது அவர்பேரில் இருக்கட்டும். காந்தியாரின் கொள்கைகளை வைத்து ஒரு மதத்தைத் தோற்றுவிப்பதுதான் எப்படித் தவறாகும்! சத்தியமும், அகிம்சையும்தானே அவருடைய முக்கிய தத் துவங்கள்! சத்தியமே கடவுள் என்பதுதானே அவருடைய முக்கிய சித்தாந்தம். தனியாக, வஸ்துவாக ஆளாக ஒரு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று பலதடவை சொல்லி  இருக்கிறார். சத்தியம்தான் கடவுள் என்று அவர் கொண்டு நடத்திருக்கிறபடியால் மக்கள் சத்தியமே கடவுள் என்று நம்பிப் பயப்பட்டு நடந்தால் இன்றையக் கடவுள்களால் ஏற்படும் பயனைவிட-எவ்வளவோ நலம் ஏற்படும். பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம். அகிம்சையையும், அன்பையும் முக்கியத் தத்துவமாகக் கொண்டதுமான ஒரு மதத்தையும், சத்தியத்தையே கொண்டதான ஒரு கடவுளையும் ஏற்பாடு செய்து துவக்கினால் அதை மக்கள் எல்லோரும் போற்றித் தழுவ மாட்டார்களா? அதன் மூலம் இன்று மக்களிடையே இருந்துவரும் சாதி வேறுபாடுகளும், மதவெறி உணர்ச்சியும் அடியோடு அழிய மார்க்கம் பிறக்காதா? அதன் மூலம் இன்று வரைக்கும் சாதிமத பேதங்களை உண்டாக்கவும், மக்களைக் காட்டுமிராண்டி காலத்திற்கு அழைத்துச் செல்லவுமே பெரிதும் பயன்பட்டு வந்த இந்துமதம், போலிக் கடவுள் அழிய வழி பிறக்காதா? மதம் என்பதென்ன-மாற்றியமைக்கக் கூடாததொன்றா? மதம் என்பதே மக்களின் நல்வாழ்வுக்காகப் பெரியோர்களால் ஏற்படுத்தப்படும் நெறி அல்லது மார்க்கம் தானே! என்றாவது மொட்டையடித்துக் கொள்வதும் சாம்பல் பூசிக் கொள்வதும் மதம் என்றாகி விடுமா? ஆகவே, என்ன காரணம் முன்னிட்டேனும், இன்றையக் கடவுள் தன்மையும், மதத் தன்மையும் மாற்றப்பட்டாக வேண்டும். இன்றைய ஏற்பாடுகள் இன்றைய ஆர்டர்’ எப்படியும் மாற்றப்பட்டாக வேண்டும். மாற்றப்படாத வரையிலும் இன்றைய மக்கள் வாழ்வு பாழாகத்தான் (Waste) போய்க்கொண்டிருக்கும்.

(விடுதலை 11.3-1948)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s