உணவுக்கட்டுப்பாடு – காந்தி

Yogananda enjoying lunch with Gandhi at Wardhaஉணவில் ஐந்து பொருள்களுக்கு அதிகமாகச் சாப்பிடுவ தில்லை என்று நான் கட்டுப்படுத்திக் கொண்டு விட்டதால் நன்மைகள் உண்டாயின. அத்துடன் சூரியன் மறைவதற்கு முன்பே உண்பதை எல்லாம் நான் முடித்துக் கொண்டு விட வேண்டும். இதனால், படு குழிகள் பலவற்றில் விழாமல் நான் தப்பித்துக் கொண்டேன். உடல்நலம் தொடர்பாக இச்செயலில் கண்டுபிடித்தவை பல உள்ளன. நாம் உணவை எளிமை யாக்கிக் கொள்வதில் மேலும் மேலும் சென்று கொண்டிருக்கிறோம் என்றும், உடல் நலத்தோடு இருப்பதற்கு வாழ்வதாக இருந்தால் ஒரு சமயத்தில் ஒரு பொருளைத் தான் உண்ண வேண்டும் என்றும், தீமை விளைவிப்பதான பலவகைக் கூட்டு உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் உணவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சேர்த்துக் கொள்ளும் முறையை விடத் தவிர்த்துக் கொள்ளும் முறை எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில், எந்த இரு மருத்துவர்களும் ஒரே வித கருத்தைக் கூறுவதில்லை.

உணவைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது அறநெறி நோக்கிலும், உலகியல் நோக்கிலும் எனக்கு நன்மையானதாக இருக்கிறது என்றே எண்ணுகிறேன். நடைமுறையில் பார்த்தால், இந்தியா போன்ற ஓர் ஏழை நாட்டில் ஆட்டுப்பால் கிடைப்பதென்பது எப்பொழுதும் எளிதானதன்று. பழங்களையும், திராட்சை யையும் கொண்டு வருவதும் கஷ்டம். மேலும், நான் ஏழை மக்களைப் பார்க்கப் போகிறேன். அவர்கள் திராட்சைப் பழத்தைச் செடியிலிருந்து கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தால், அவர்கள் என்னை ஒதுக்கித் தள்ளி விடுவார்கள். ஆகையால் ஐந்து பொருள்களுக்கு மேல் உண்பதில்லை என்று கட்டுப் படுத்திக் கொண்டிருப்பது சிக்கனத்திற்கும் பொருத்தமாக இருக்கிறதுஒருநாளில் தாம் சாப்பிடும் உணவில் ஐந்து பொருள்களுக்கு மேல் சேர்த்துக்கொள்வதில்லையென்றும், இருட்டிய பிறகு எதுவும் சாப்பிடுவதில்லை என்றும் விரதம் எடுத்துக்கொண்டார். இந்த விரதத்தை மகாத்மா தம் அந்திய நாள் வரையில் நிறைவேற்றினார்

1915 இல் கும்பமேளா உற்சவத்தில் போனிக்ஸ் ஆசிரமவாசிகள் மிகச் சிறந்த தொண்டு செய்தார்கள். ஆனால் மகாத்மா அந்தத் தொண்டில் அதிகமாக ஈடுபடவில்லை. ஏனெனில் மகாத்மா தென்னாப்ரிக்காவில் நடத்திய போராடத்தின் வரலாறு இதற்குள்ளே பலருக்குத் தெரிந்து போயிருந்தது. எனவே உற்சவத்துக்கு வந்த யாத்ரீகர்கள் பலர் மகாத்மா காந்தியையும் பார்க்க வந்தார்கள். அவர்களுடன் பேசுவதற்கும் மதம், சமூகம், அரசியல் முதலிய விஷயங்களைப் பற்றி விவாதிப்ப தற்குமே நேரம் சரியாயிருந்தது.

கும்பமேளாவில் காந்திஜி பார்த்த பல காட்சிகள் அவருக்கு வெறுப்பை அளித்தன. ‘சாதுக்கள்’ என்று சொல்லப்பட்ட சந்நியாசி வேஷதாரிகளின் நடவடிக்கைகள் காந்திஜிக்குப் பிடிக்கவே இல்லை. மதத்தின் பெயரால் பல ஏமாற்றுகள் நடப்பதையும் காந்திஜி கவனித்தார். உதாரணமாக, ஐந்து கால் உள்ள பசுமாடு ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டிருந்தது. பசுவைப் போற்றுகிற ஹிந்துக்கள் பலர் மேற்படி ஐந்து கால் பசுவைத் தெய்வ அம்சம் உள்ளதாகக் கருதி அதை வழிபட்டு அதன் சொந்தக்காரனுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் போனார்கள். ஐந்து கால் பசு முதலில் காந்திஜிக்கு வியப்பு அளித்தது. பிறகு, விசாரித்து்ப பார்த்ததில், உண்மையில் அந்தப்பபசுவுக்கு ஐந்து கால் இல்லை என்றும், ஒரு கன்றுக் குட்டியின் காலை வெட்டி ஒட்ட வைத்திருக்கிறது என்றும் தெரிந்து கொண்டார்! இந்தக்கொடூரமான செயல் மகாத்மாவின் கருணை நிறைந்த உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது.

மொத்தம் பதினேழு லட்சம் ஜனங்கள் அந்த வருஷத்துக் கும்பமேளா உற்சவத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களில் மிகப் பெரும்பாலோர் உண்மையான பக்தியுடனே புண்ணியந் தேடிக் கொள்வதற்காகவே வந்திருந்தார்கள் என்பதைக் காந்திஜி அறிந்திருந்தார். ஆனால் சில மோசக்காரர்கள் அக்கிரம தந்திரங்களைக் கையாண்டு பக்தியுள்ள பாமர மக்களை ஏமாற்றி வந்தார்கள். இதற்குப் பிராயச்சித்தமாகத் தாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று காந்திஜிக்குத் தோன்றியது. ஒருநாளில் தாம் சாப்பிடும் உணவில் ஐந்து பொருள்களுக்கு மேல் சேர்த்துக்கொள்வதில்லை யென்றும், இருட்டிய பிறகு எதுவும் சாப்பிடுவதில்லை என்றும் விரதம் எடுத்துக்கொண்டார். இந்த விரதத்தை மகாத்மா தம் அந்திய நாள் வரையில் நிறைவேற்றினார் — கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மாந்தருக்குள் ஒரு தெய்வம்


LETTER TO HERMANN KALLENBACH ON THE WAY TO MADRAS,
April 16[ 1915]
At Hardwar, one of the holiest places in India, I felt the need to take a further step and this is what I have done. In India I am not to take for my sustenance more than five things during 24 hours and not to eat after sunset. Things include condiments. Thus if I have taken today, say, bananas, dates, ground-nuts, oranges and lemons, I may not take cloves or tamarind. I still take two meals and I have to make my choice of five things for the day. Both the vows are fairly stiff. But they had to be taken. The spirit was there. The flesh will have to yield.


Related ::  Gandhi’s cook was Govind, a Harijan boy !

In his history of the Balmiki workers of Delhi, the scholar Vijay Prashad says when Gandhi staged his visits to the Balmiki Colony on Mandir Marg (formerly Reading Road) in 1946, he refused to eat with the community:

You can offer me goat’s milk,’ he said, ‘but I will pay for it. If you are keen that I should take food prepared by you, you can come here and cook my food for me’…Balmiki elders recount tales of Gandhi’s hypocrisy, but only with a sense of uneasiness. When a dalit gave Gandhi nuts, he fed them to his goat, saying that he would eat them later, in the goat’s milk. Most of Gandhi’s food, nuts and grains, came from Birla House; he did not take these from the dalits. Radical Balmikis took refuge in Ambedkarism which openly confronted Gandhi on these issues – (Vijay Prashad -Untouchable Freedom a Social History of a Dalit-Community- Page 139)

அருந்ததி ராய் இதை தனது “B.R. Ambedkar, Arundhati Roy (introduction)-Annihilation of Caste New annotated edn. (2014)” இல் குறிப்பிடுகிறார். காந்தியைப் பற்றி படித்திருந்தால் தான் இவை எல்லாம் தெரியும்.விமர்சனம் என்ற பெயரில் அவதூறாக அடித்துவிடுவது இவர்களின் கைவந்த கலை ! 


ADVICE TO BHANGIS
NEW DELHI,
April 3, 1946

Gandhiji said that it would be better, if the money they wanted to spend on entertaining him were spent on educating a Harijan child. He appealed to Harijans to eradicate the evils of wine, gambling and prostitution. He said that they should be Bhangis like him. Defining the term Bhangis he said, it meant a well-wisher of all.I shall consider my stay among you amply rewarded, if you give up these vices. I have enjoyed your hospitality. You can offer me goat’s milk. But I will pay for it. If you are keen that I should take food prepared by you, you can come here and cook for me. My real aim in staying here is to probe into your real needs.The Hindustan Times, 5-4-1946 (According to the report, residents of Bhangi Colony met Gandhiji after evening prayers and “invited him to have a meal with them”)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s