பெரியாரை அணுகுவது எப்படி ?

phoca_thumb_l_periyar_90sநான் அடிக்கடி கொள்கையில் மாற்றமடைபவன் என்று சொல்லப்படுகிறது. உண்மையாக இருக்கலாம். நீங்கள் அதை ஏன் கவனிக்கிறீர்கள் ? ஒரு மனிதன், அவன் பிறந்தது முதல் இன்று வரை திருடிக்கொண்டே இருக்கிற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால், அவன் மகா யோக்கியனா ? எந்த மனிதனும் ஒரே நிலையில் இருக்கவேண்டும் ‘ என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள் ? அதனால் உங்களுக்கு என்ன இலாபம் ? மாறுதல் முற்போக்குள்ளதா, பிற்போக்குள்ளதா ? அதனால் மக்களுக்கு நன்மையா ? தீமையா ? என்பன போன்றவற்றைக் கவனிக்க வேண்டியதுதான் அறிவாளிகளின் கடமையாகும்.

மற்றும், பொது நன்மையை உத்தேசித்து– கஷ்டப்படுகிற மக்கள் நன்மையை உத்தேசித்து மாறினானா ? அல்லது சுயநலத்திற்கு — அக்கிரமமான இலாபமடைவதற்கு மாறினானா ? என்று பார்க்க வேண்டும். யோக்கியன், அறிவாளி, ஆராய்ச்சியாளி, பொறுப்பாளி, கவலையாளி ஆகியவர் மாறவேண்டியது அவசியமாகலாம். அதைப் பற்றிய கவலை ஏன் ? யார் எப்படி மாறினாலும் பார்க்கின்றவர்களுக்கு புத்தியும் கண்ணும் சரியாய் இருந்தால், மாற்றத்தைப் பற்றி ஒன்றும் ஆபத்து வந்துவிடாது.

நான் பலதடவை மாறியிருக்கலாம்; பல குட்டிக்கரணங்கள் போட்டிருக்கலாம்; சுயநலத்திற்காகவும் போட்டிருக்கலாம்; பச்சோந்தியாகவும் இருக்கலாம். அதனால் உங்களுக்கு என்ன கெடுதி ? நாடகக் கொட்டகையில் நாடகம் பார்க்கின்ற போது ஒரு மனிதன் எத்தனை வேடம் மாறி மாறிப் போட்டு நடிப்பதை நீங்கள் காசு கொடுத்துப் பார்த்துவிட்டு, நடித்தவனையும் புகழ்ந்துக்கொண்டு போகின்றீர்களா, இல்லையா ?

கோயில் கட்டிய மக்கள், கோயிலை இடிக்க வேண்டியவர்களாகி விடுவார்கள். அகிம்சை பேசுபவர்கள் பலாத்காரத்தைப் பேச வேண்டியவர்களாகி விடுவார்கள். இராஜ விசுவாசிகள் இராஜத் துரோகிகள் ஆகிவிடுவார்கள். திருடக்கூடாது என்பவர்கள் கொள்ளையடிக்கச் சொல்வார்கள். இப்படியாக, அபிப்பிராயங்கள் மாறிக்கொண்டு போகலாம். இவற்றையெல்லாம், அபிப்ராயங்கள் மாறியதாலேயே குற்றம் என்று சொல்லிவிட முடியாது. தங்களை ‘நல்ல சூத்திரர்கள் ‘ என்று சொல்லிக்கொண்டு பார்ப்பனர் கால்களைக் கழுவிய தண்ணீருக்கு பவுன் கொடுத்துச் சாப்பிட்டவர்கள் இன்று ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி, என்றும் ‘பார்ப்பனர்கள் ஜாக்கிரதை ‘ என்றும் ஏன் சொல்லுகிறார்கள் ? இந்த மாற்றத்தால் இப்படிச் சொன்னவர்கள் அயோக்கியர்கள் ஆக முடியுமா ? தவிர, ‘சூத்திரன் பணம் வைத்திருந்தால், பிராமணர்கள் பலாத்காரத்தால் அதைப் பறித்துக் கொள்ளலாம், என்று மனுதர்ம சாஸ்திரத்தில் இருந்தது மாறி இப்போது வெள்ளையர் தர்மத்தில் ‘தந்திரங்களாலும் சூழ்ச்சிகளாலும் மாத்திரந்தான் பறித்துக் கொள்ளலாம் ‘ என்கிறதான மாறுதல் ஏற்பட்டுவிட்டது நாளை ஒரு சமயம் சமதர்ம காலத்தில், ‘பிராணர்கள் (சரீரத்தால் பாடுபடாதவன்) சொத்து வைத்திருந்தால், மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக் கொள்ளலாம் ‘ என்று ஏற்பட்டாலும், ஏற்படலாம். இம்மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும், நாட்டின் முற்போற்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும். எனவே, நான் மாறுதல் அடைந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. நாளை நான் எப்படி மாறப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால் நான் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்.

(நாகையில், 3-10-1931-ல் சொற்பொழிவு– ‘குடி அரசு ‘ … 11-10-1931)

மகாத்மாவின் கொள்கைகளால்தான் நமக்குச் சுயராஜ்யம் கிடைக்கப் போகின்றது – 24.05.1925

“மகாத்மா” என்கின்ற பட்டத்தை நீக்குதல்25.12.1927

இந்தியாவுக்கு ‘ஹிந்துஸ்தான்’ என்கிற பெயருக்குப் பதிலாக ‘காந்திதேசம்’ அல்லது ‘காந்திஸ்தான்’ என்று பெயரிடலாம். இந்துமதம் என்பதற்குப் பதிலாக ‘காந்திமதம்’ அல்லது காந்தினிசம்’ என்பதாக மாற்றப்படலாம். …-  14-2-1948

காந்தியின் கடவுள் – 22.02.1948

இந்து மத ஒழிப்பு தினம் – 19-11-1949 

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – 19.9.1957

பொழுதைப்போக்க பெரியாரை படித்தால் குழப்பமே மிஞ்சும் அந்தந்த காலகட்ட அரசியலுக்கு தக்கபடி எதிர்வினை புரிந்திருப்பார்.அதை கணக்கில் கொள்ளவேண்டும். – ராட்டை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s