நேதாஜியின் காந்தி பக்தி – ஜெயமணி சுப்பிரமணியம்

அகில உலகமும் போற்றும் உத்தமரான காந்திஜியைப் பற்றியும் அந்த அவதார புருஷரின் கொள்கைகள் பற்றியும் எத்தனையோ பெரியோர்கள் பேசியும் எழுதியும் இருக்கின்றனர்.எத்தனையோ அரிய நூல்களும் வெளியாகியிருக்கின்றன.எனவே நான் அவ்விஷயமாகப் புதிதாய் எழுதுவதற்கு என்ன இருக்கிறது எனினும் மலாய் நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை மாத்திரம் குறிப்பிட விரும்புகிறேன்.சென்ற மகாயுத்தத்தின் போது மலாய் நாட்டிலும் மற்றக் கிழக்காசிய நாடுகளிலும் ஜப்பானின் ஆதிக்கம் ஏற்பட்டதும் அப்போது அந்த நாடுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் உருவாகி பாரத நாட்டின் வடகோடியில் பல நகரங்களைக் கைப்பற்றியதும் யாவரும் அறிந்ததாகும்.அப்போது நேதாஜி போஸை முதன் முதலாகக் கோலாலம்பூருக்கு வரவேற்கும் பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன்.கோலாலம்பூரில் உள்ள இந்திய சுதந்திர சங்கக் கட்டிடத்தின் வாயிற்படிக்கு மேலே நேதாஜியின் பெரிய உருவப்படம் மாட்டப்பட்டிருந்தது.அதை உற்றுப் பார்த்த வண்ணம் நேதாஜி கட்டிடத்திற்குள் சென்றார்.பல அறைகளையும் பார்வையிடார்.அவர் கட்டிடத்தைப் பார்வையிடுவதாக எல்லோரும் கருதினர் கடைசியில் கட்டிட மண்டபத்தில் அவர் வந்து அவருக்காக அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தும் நாங்களும் உட்கார்ந்தோம்.பதினாயிரக்கணக்கான இந்திய மக்கள் கட்டிடத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.உள்ளே மண்டபத்தில் நேதாஜியுடன் எங்களில் சுமார் பத்துப் பேர்களே இருந்தனர்.நேதாஜி என்ன சொல்லப் போகிறாரோ என்று மிக ஆர்வத்துடன் உணர்ச்சி பொங்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.நேதாஜி பேச ஆரம்பித்தார்.

banner15
முதலில் வாயிற்படிக்கு மேலே உள்ள படத்தை அப்புறப்படுத்துங்கள் என்றார்.அஞ்சா நெஞ்சம் படைத்த நேதாஜி அவ்விதம் கூறியபோது அவருக்கு நா தழுதழுத்தது கண்கள் கலங்கின.அவர் மேலும் பேசத் தொடங்கினார்.இந்த இயக்கத்துக்கு நான் தலைவன் என்றாலும் நம் எல்லோருக்கும் பாரத நாடு முழுவதற்கும் தலைவர் தந்தை மகாத்மா காந்திதான்.ஆகையால் அவர் படத்தை அங்கு வைப்பதுதான் நமக்கு பெருமை.இனி எந்த இடத்திலும் காந்திஜியின் படத்துக்குதான் அக்ரஸ்தானம் அளிக்க வேண்டும்.அந்த மகான் நம் நாட்டுக்குக்காக இவ்வளவுதூரம் உழைத்திராவிட்டால் நாம் இன்று இந்த மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்திருக்க முடியுமா ? இன்று நமக்கு வல்லரசுகளான ஜப்பானும் ஜெர்மனியும் இதர நாடுகளும் மதிப்பு அளிப்பதற்குக் காரணம் மகாத்மா காந்திஜியின் அறிவும் ஆற்றலும் ஒழுக்கமும் உயர்வுந்தான்.எனவே அந்த மகானின் மானசிகமான ஆசியிருந்தால்தான் நாம் இந்த இயக்கத்தில் வெற்றி காண முடியும்.இவ்விதம் நேதாஜி கூறியதைக் கேட்ட பிறகு தான் அங்கு இருந்தவர்களின் கண்கள் திறந்தன.நேதாஜிக்கும் காந்திஜிக்கும் ஏற்பட்ட வேற்றுமையை மனத்திற்கொண்டு சங்க அதிகாரி ஒருவர் அத்தவறு செய்துவிட்டார்.நேதாஜிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் விஷயம் என்று அவர் எண்ணியது.கடைசியில் மேற்கூறிய விதம் விபரீதமாக முடிந்தது.ஆயினும் என்ன ? காந்திஜி மீது நேதாஜிக்கு இருந்து மதிப்பும் பக்தியும் நம்பிக்கையும் வெளியாவதற்கு அச்சம்பவம் காரணமாக இருந்தது அல்லவா ?

(ஆதாரம் – ஜெயமணி சுப்பிரமணியம் – கிராம ராஜ்யம் 29.01.60)

வி.விவேகானந்தன் அவர்களின் “காந்திய அமுதம்” – மே 2015 இதழில்(விலை 1 ரூ) வெளிவந்த கட்டுரை

முகவரி : வி.விவேகானந்தன்,மகாத்மா காந்தி சேவா மையம்,1/883.குற்றாலம் ரோடு,பிரானூர்,செங்கோட்டை – 627 809, தொடர்புக்கு : 233033,94867 02701

மதுவுக்கு எதிராக ஒரு மர வியாபாரியின் போராட்டம்: வியக்க வைக்கும் விவேகானந்தன்

நேதாஜி வழி நடத்திய “இந்திய தேசிய ராணுவத்தின்” சில பிரிவுகள் : சுபாஷ் பிரிகேட்(Brigade – படை அலகு),காந்தி பிரிகேட்,ஆசாத் பிரிகேட், நேரு பிரிகேட் ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s