மகாத்மாவின் கொள்கைகளால்தான் நமக்குச் சுயராஜ்யம் கிடைக்கப் போகின்றது – பெரியார்

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாட்டில்…..

periyar_gandhiஇரண்டாவது தீர்மானம் மகாத்மாவிடம் அன்பு செலுத்துவது என்பதே. மகாத்மா அவர்கள் பிறந்து உயிரோடிருக்கிற இந்தக்காலத்தில் நாமிருந்தோம் என்கிற பெருமையே நமக்குப் பெரிய சொத்தாகும். நம் பின் சந்ததியார்கள் மகாத்மாவை நேரில் கண்ட நமது பெருமையைப் பற்றிப் பேசிப் பெருமையடைவார்கள். இப்பெரியார் வேறு தேசத்தில் பிறந்திருப் பாராயின் அத்தேசம் எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கும். அவர் நமது ராஜீயத் தலைவர் மாத்திரமல்ல, உலகத்திற்கே அவர் ஒரு பெரியவர். அவரைப் பூஜிக்கிறோம், புகழ்கிறோம், அவர் பெயரால் பெருமை பாராட்டிக் கொள்கிறோம். அவர் சொல்லுகிற வேலையை நாம் செய்வதில்லை. ஆனால் நமது சுயநலத்திற்கு அவருடைய பெயரை உபயோகப்படுத்துகிறோம். சட்ட சபைகளுக்கும், ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு நுழையப் பார்க்கின்றோமே தவிர தியாகம் என்று சொன்னால் ஓடி விடுகின்றோம்.

 

அவருடைய நிர்மாண திட்டமென்பது தேசத்தின் முன்னேற்றத்திற்கான வேலைகள். அவருடைய அழிவு வேலையென்பது தேசத்திற்குக் கெடுதி தரும் காரியங்களை அழித்தல். இதை நன்றாய் அறிந்திருந்தும் ஆற்றலில்லாத காரணத்தாலும், சுயநலத்தாலும் அலட்சிய மாயிருக்கிறோம். மஹாராஷ்டிர தேசத்தில் மகாத்மாவைக் காங்கிரஸை விட்டு வெளியில் போகும்படி சொல்லுவதும், நூலையும் கதரையும் அவர்கள் அலட்சியம் செய்வதும் அத்தேசத்தில் உள்ள பிராமணர் – பிராமணரல்லாதார் சண்டை தான். எப்படியிருந்த போதிலும் மகாத்மாவின் கொள்கைகளால்தான் நமக்குச் சுயராஜ்யம் கிடைக்கப் போகின்றது. அன்னார் நீடித்திருக்க கடவுள் அனுக்கிரகம் செய்யப் பிரார்த்திப்பது நமது முக்கிய கடமை.

 

23,24.05.1925, பள்ளத்தூரில் நடைபெற்ற காரைக்குடி மாவட்ட முதலாவது அரசியல் மாநாடு – நிறைவுரை தொடர்ச்சி

 

குடி அரசு -சொற்பொழிவு – 07.06.1925

 

Advertisements

2 thoughts on “மகாத்மாவின் கொள்கைகளால்தான் நமக்குச் சுயராஜ்யம் கிடைக்கப் போகின்றது – பெரியார்

  1. Pingback: இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார் | இராட்டை

  2. Pingback: பெரியாரை அணுகுவது எப்படி ? | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s