நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா?- 2

பூ.கொ.சரவணன் பக்கங்கள்

நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபொழுது போஸ் அயல் நாட்டில் இருந்தார். இருவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த மோதிலால் நேருவின் மரணம் குறித்து, போஸ் அந்தக் கடிதங்களில் எங்கேயும் ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை. அது மட்டுமல்லாமல் பிப்ரவரி மாதம் இறந்துபோன மோதிலால் நேருவை, மார்ச் மாதத்தில் இறந்துபோனார் என்று தன்னுடைய சுயசரிதையில் தவறாகப் பதிவு செய்கிறார் போஸ்.

பாசிசத்தின் கட்டுப்பாடு, போஸை இந்தக் காலத்திலேயே ஈர்க்க ஆரம்பித்திருந்தது. காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை வர்ணிக்கிற பொழுது, ‘பாரீஸ் நகரம் நோக்கி எல்பாவில் இருந்து நெப்போலியன் புறப்பட்டது போல, ரோமை நோக்கி முசோலினி புறப்பட்டது போல’ தண்டி யாத்திரை இருந்ததாக வர்ணிக்கிறார். இந்தப் பாசிச பாசம் இறுதிவரை போஸிடம் தொடரவே செய்தது.

உப்பு சத்தியாகிரகத்தை காந்தி திரும்பப்பெற்றது, போஸ் மற்றும் வித்தல்பாய் படேல் ஆகியோரை கடுமையாகக் கடுப்பேற்றியது. ஆஸ்திரியாவில் இருந்து கூட்டறிக்கை வெளியிட்டவர்கள், ‘மகாத்மா காந்தி ஒரு அரசியல் தலைவராகத் தோல்வியடைந்துவிட்டார் என்று நாங்கள் தெளிவாக நம்புகிறோம். காங்கிரஸ் இயக்கத்தை புரட்சிகரமான பாணியில் மாற்றும் புதிய தத்துவம், முறை தேவைப்படுகிறது. இதைச் சாதிக்க தலைமை மாற்றம் தேவை. மேலும் தீவிரவாதத்தன்மை கொண்டதாக ஒத்துழையாமை மாறவேண்டும்…’ என்று நீண்டது அந்த அறிக்கை.

நேருவோ இந்தியாவில் காந்திக்கு அருகில் இருந்தார். வெகு வெறுமையாக உணர்ந்த நேரு, காதியை விற்றல், கைத்தறி நெய்தல், தையல் ஆகிய சமூகப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்று காந்தி அழைத்ததில் அதிர்ந்துபோனார்…

View original post 1,504 more words

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s