நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா? – 3

பூ.கொ.சரவணன் பக்கங்கள்

போஸ் ஐரோப்பாவில் இருந்தபோது சர்தார் வல்லபாய் படேலின் சகோதரரான வித்தல்பாய் படேலை கவனித்துக் கொண்டார். அங்கேயே மரணமடைந்த அவர், தன் சொத்துக்களில் பெரும்பங் கினை நாட்டு நலப்பணித் திட்டங்களுக்குச் செலவிடுமாறு போஸுக்கு எழுதி வைத்தார். வல்லபாய் படேல், ‘அந்தப் பணம் காங்கிரசின் ஒரு சிறப்புக் கமிட்டின் கீழ் வைக்கப்பட்டுச் செலவு செய்யப்பட வேண்டும்!’ என சொன்னதற்கு நேதாஜியும் ஒப்புக்கொண்டார்.

அதே சமயம், கமிட்டியில் யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கோர்ட் படியேறினார்கள். இரண்டு முறையும் படேலே வழக்கில் வென்றிருந்தார்.

தான் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர விரும் புவதாக காந்தியிடம் போஸ் சொன்னார். மதவெறி மிகுந்த சூழ லில் நிலைமையைச் சீராக்க மௌலானா அபுல் கலாம் ஆசாத்தை தலைவராக ஆக்க விரும்புவதாக சொல்லிய காந்தி, செயற்குழுவையும் அதை ஏற்க வைத்தார்.

ஆனால் அபுல் கலாம் ஆசாத்,  போஸும் தானும் வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தலைவராக விரும்ப வில்லை என்று விலகிக்கொண்டார். நேருவை அழைத்து தலைவர் தேர்தலில் நிற்க காந்தி அழைப்பு விடுக்க, அவர் போஸுக்கு எதிராக தான் நிறுத்தப்படுகிறோம் என உணர்ந்தவராக, போட்டியிட மறுத்தார்.

காந்தி யாரையும் கலந்தாலோசிக்காமல் பட்டாபி சீதாராமையாவை வேட்பாளர் ஆக்கினார். தாகூர், நேரு மற்றும் காந்தி ஆகியோரிடம் போஸுக்கு ஆதரவு கேட்டுக் கடிதம் எழுதினார். அடுத்த ஜனவரியில் நடக்கும் தேர்தலுக்கு நவம்பரிலேயே கடிதம் எழுதிய தாகூரிடம் அந்தக் கேள்வி குறித்து…

View original post 1,469 more words

பின்னூட்டமொன்றை இடுக