நேரு, நேதாஜி – அரசியல் எதிரிகளா? – 1

நேரு vs நேதாஜி பற்றி பூ.கொ.சரவணன் அவர்கள் எழுதிய தொடர்

பூ.கொ.சரவணன் பக்கங்கள்

நேரு – நேதாஜி: ஒற்றுமையும் வேற்றுமையும்…

வஹர்லால் நேரு, நேதாஜியை உளவு பார்த்தார் என்கிற விஷயம் உளவுத்துறையின் கோப்புகள் மூலம் சமீபத்தில் வெளிப்பட்டது. ‘நேரு, நேதாஜியை கொன்றுவிட்டார்!’ என்கிற அளவுக்கு சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் இருவரின் உறவு எப்படிப்பட்டதாக இருந்தது? இந்திய அரசியலில் இவர்களின் பங்களிப்பு என்ன? இவர்கள் நண்பர்களா? எQதிரிகளா? வரலாறு என்ன சொல்கிறது? என்பதை இந்த மினி தொடரில் பார்க்கலாம்….

நேருவுக்கும், நேதாஜிக்கும் சில பல ஒற்றுமைகள் இளமைக்காலம் முதலே இருந்து வந்தது. இருவரும் ஆங்கிலேய ஆட்சியின் மிக முக்கிய நகரங்களில் பிறக்காமல் முறையே அலகாபாத், கட்டாக்கில் பிறந்து வளர்ந்தார்கள். இருவரின் அப்பாக்களும் வழக்கறிஞர்கள், இருவரும் மேற்படிப்பை கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் படித்து பட்டம் பெற்றார்கள்.

நேரு தியாசபிகல் இயக்கத்தால் ( Theosophical Society ) ஈர்க்கப்பட்ட சூழலில், நேதாஜி ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டார். குருக்களிடம் யோகா கற்றுக்கொண்டார். விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரின் மனிதகுலத்துக்கான சேவை,  தியாகம் மற்றும்  சிந்தனைகளால் கவரப்பட்டார்.

பள்ளி, கல்லூரி காலத்தில் படிப்பில் பெரிய அளவில் நேரு ஜொலிக்கவில்லை. நேதாஜியோ மெட்ரிகுலேசன் தேர்வில் பல்கலை அளவில் இரண்டாம் இடம் பெற்றார். சாந்திப்பூரில் ராமகிருஷ்ணரின் கருத்துக்களால் தாக்கம் பெற்ற இளைஞர்கள் இணைந்து கேம்ப் ஒன்று நடத்தியபொழுது, அதில் காவியுடை அணிந்து பல்வேறு விவாதங்களில் போஸ் பங்குகொண்டார். சங்கரரின் அத்வைதம் அவரில் தாக்கம் செலுத்தினாலும், அது ஏற்புடையதாக அவருக்கு இருக்கவில்லை. ‘முள் போல…

View original post 1,062 more words

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s