V.I.முனிசுவாமி பிள்ளை அவர்கள் அம்பேத்கருக்கு அளித்த பதில்

நீலகிரியை சேர்ந்தவரும், பொதுவாழ்வில் தீவிரமாக இயங்கி வரும் ஹரிஜன ஆளுமையுமான   V._I._Munuswamy_Pillaiதிரு.V.I.முனிசுவாமி பிள்ளை அவர்கள் அம்பேத்கருக்குப் பதில் அளித்துள்ள அறிக்கை கீழே இடம்பெறுகிறது. முனிசுவாமி பிள்ளை அவர்கள் 12 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராகவும், 1937-39 வரையிலான மெட்ராஸ் மாகாண காங்கிரஸ் அரசில் தீர்வை, வனங்கள் துறை அமைச்சராக இருந்தார். இந்தப் புத்தகத்தின்* முதல் பதிப்பு வெளிவந்ததற்குப் பிறகு நடந்த 1946-ம் வருடத் தேர்தலைப் பற்றி எழுதிய அம்பேத்கர் காங்கிரஸ் ஹரிஜன வேட்பாளர்கள் ஹரிஜனங்களின் வாக்குகளில் வெல்லவில்லை என்றும், முதலில் ஹரிஜனங்கள் மட்டும் வாக்களித்து நடத்தும் தேர்தலில் ஓட்டுக்களைப் பெறாமல் போனாலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பின்னர் ஜாதி இந்துக்களின் ஓட்டுக்களைக் கொண்டே வென்றார்கள் என்றுள்ளார். இதற்கு மறுப்பாக ‘அசோசியேட் பிரஸ் ஆஃப் இந்தியா’ செய்தி நிறுவனத்துக்கு ஜூலை 22,1946-ல் முனிசுவாமி அளித்துள்ள அறிக்கை :

Dr.அம்பேத்கர், திரு.சிவராஜ் ஆகியோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்கள். மெட்ராஸ் மாகாண சட்டசபையின் பட்டியல் ஜாதியைச் சேர்ந்த உறுப்பினர் என்கிற முறையில் பொதுமக்கள் குறிப்பாகப் பட்டியல் ஜாதி சகோதர, சகோதர்களின் முன்னால் சில உண்மைகளை வைக்க விரும்புகிறேன்.

நான் என்னுடைய தொகுதியில் இருந்து எந்தப் போட்டியுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னைப்போலவே பட்டியல் ஜாதியைச் சேர்ந்த மேலும் ஏழு சக பட்டியல் ஜாதி வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்தலில் வென்றார்கள். Dr.அம்பேத்கர், திரு.சிவராஜ் கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் இந்த எட்டுத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து யாரையும் நிறுத்தவில்லை. பட்டியல் ஜாதியினருக்கு ஒதுக்கப்பட்ட மேலும் 12 தொகுதிகளில் முதல்கட்டத் தேர்தல் நடைபெறவில்லை. நேராக இறுதி மற்றும் பொதுத்தேர்தலே நடைபெற்றது. காரணம் போதுமான பட்டியல் ஜாதி வேட்பாளர்கள் களத்தில் இல்லை என்பதே ஆகும். இந்தப் பன்னிரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற்றார்கள் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மீதமுள்ள பத்துத் தொகுதிகளில் அடிப்படைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஏழு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முதலிடம் பெற்றார்கள். மீதமுள்ள மூன்று தொகுதிகளில் அவர்கள் முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களைப் பெற்றார்கள். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னுமொரு விஷயமும் உள்ளது. இந்தக் காங்கிரஸ் வேட்பாளர்கள் முதலிடம் பெற முடியாத மூன்று தொகுதிகளிலும் முதலிடத்தைப் பிடித்தவர்கள் அம்பேத்கர் கட்சி வேட்பாளர்கள் இல்லை. நான் மேலே தந்துள்ள தகவல்கள் காங்கிரஸ் ஹரிஜன வேட்பாளர்கள் மொத்தமுள்ள முப்பது தொகுதிகளில் 27 தொகுதிகளில் போட்டியின்றியோ அல்லது முதலிடம் பெற்றோ வென்றுள்ளார்கள். மூன்றே தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் கட்சியின் ஹரிஜன வேட்பாளர்கள் அதிகப் பட்ச வாக்குகளைப் பெறமுடியாமல் போயிருக்கிறது. 1937-ம் வருட அடிப்படைத்தேர்தலில் முதலிடம் பெற்ற சிவசண்முகம் பிள்ளை இந்த 1946 தேர்தலில் போட்டியின்றி வென்றதோடு மட்டுமல்லாமல் மெட்ராஸ் மாகாண சட்டசபையின் சபாநாயகராக உள்ளார்.

*அம்பேத்கரின் ‘காந்தியும், காங்கிரஸும் தீண்டப்படாத மக்களுக்கு என்ன செய்தார்கள்?’

சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி எழுதிய ” அம்பேத்கருக்கு மறுப்பு ” என்ற புத்தகத்தில் இருந்து  

Advertisements

One thought on “V.I.முனிசுவாமி பிள்ளை அவர்கள் அம்பேத்கருக்கு அளித்த பதில்

  1. Pingback: Ambedkar’s Political career | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s