அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது எடுத்துக் கொண்ட 22 உறுதி மொழிகள்

14-10-1956 ல் நாக்பூர் நகரில் அம்பேத்கர் அவர்கள் பவுத்தம் தழுவிய போது எடுத்துக் கொண்ட 22 உறுதி மொழிகள் ambedkar_buddha_deeksha_20120820

1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி நான் வணங்கமாட்டேன்.

2. இராமன், கிருஷ்ணன் இரண்டும் அவதாரமென எண்ணி நான் வணங்கமாட்டேன்.

3. கணபதி, லட்சுமி மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று நான் வணங்கமாட்டேன்.

4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்து வந்ததாகவோ நான் நம்பமாட்டேன்.

5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்த்து நான் முறியடிப்பேன்.

6. பிறப்பு, இறப்பு நிகழ்ச்சிகளில் இந்து மதச் சடங்குகளை நான் செய்ய மாட்டேன்.

7. மகாபுத்தரின் போதனைகளையும், நெறிகளையும் மீறி நான் நடக்க மாட்டேன்.

8. பார்ப்பனர்கள் செய்யும் எந்த ஒரு ஆச்சாரச் செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன்.

9. மானுட சமத்துவத்தில் நான் மிகுந்த நம்பிக்கை வைப்பேன்.

10. சமத்துவத்தை நிலை நிறுத்த நான் முழு மூச்சாய் பாடுபடுவேன்.

11. மகாபுத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு நான் பின்பற்றுவேன்.

12. மகாபுத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று நான் செயல்படுவேன்.

13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி அவைகளை பாதுகாத்து நான் வாழ வைப்பேன்.

14. நான் பொய் பேச மாட்டேன்.

15. நான் களவு செய்ய மாட்டேன்.

16. நான் காமவெறி கொள்ள மாட்டேன்.

17. நான் மது அருந்த மாட்டேன்.

18. மகாபுத்தர் போதித்த அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறி களின் அடிப்படையில் என் வாழ்க் கையை நான் உருவாக்க முயற்சி செய்வேன்.

19. மானுட நேயத்திற்கு முரணானதும், சமத்துவம் இல்லாததுமான இந்து மதத்தை விட்டொழித்து இன்று முதல் மேன்மைமிகு பவுத்தத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கமென நான் உறுதியாக ஏற்கிறேன்.

21. இன்று பௌத்தனானதால் மறுவாழ்வு பெற்றதாய் நான் மனதார நம்புகிறேன்.

22. மகாபுத்தரின் கொள்கைக் கோட்பாட்டிற்கேற்ப புத்த தம்மத்திற் கிணங்க இன்று முதல் செயல்படுவேன்.

Related :: The 11 vows of Gandhiji 

மதுவிலக்கு முட்டாள்தனமானது. அது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் (7.10.1951)  மதுவிலக்கு குறித்து SCF ன் தீர்மானம்

Beef-eating As The Root Of Untouchability ,Did The Hindus Never Eat Beef ? Why Did Non-Brahmins Give Up Beef-Eating ? What Made The Brahmins Become Vegetarians ? Why Should Beef-Eating Make Broken Men Untouchables ? The Untouchables who were they and why they became Untouchables

11. மகாபுத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு நான் பின்பற்றுவேன். /  I shall follow the noble eightfold path of the Buddha > right view, right aspiration, right speech, right action, right livelihood, right effort, right mindfulness, right concentration / Noble Eightfold Path  > right livelihood > The five types of businesses that are harmful to undertake are: 3.Business in meat : “meat” refers to the bodies of beings after they are killed. This includes breeding animals for slaughter 4.Business in intoxicants : manufacturing or selling intoxicating drinks or addictive drugs

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s