இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கள்ளர்கள் 1930-31ல் பட்டியலின மக்களுக்கு செய்த வன்கொடுமைகள்

Has the law as laid down by Manu for the Bahayas any counterpart in the present day social relationship between the Hindus and the Untouchables?

indian-aborigines-children-members-of-the-untouchables-caste-posing-near-home-in-their-village_i-G-60-6042-KLPB100ZTo those who doubt I ask to take the following case into consideration. The incident has occurred in the Ramnad District of the Madras Presidency. In December 1930 the Kallar in Ramanad propounded eight prohibitions, the disregard of which led to the use of violence by the Kallar against the untouchables whose huts were fired, whose granaries and property were destroyed, and whose livestock was looted. These eight prohibitions were as follows :—

(i) that the Adi-Dravidas shall not wear ornament of gold and silver;

(ii) that the males should not be allowed to wear their clothes below their knees or above the hips;

(iii) that their males should not wear coats or shirts or baniyans;

(iv) No Adi-Dravida should be allowed to have his hair cropped.

(v) that the Adi-Dravidas should not use other than earthenware vessels in their homes;

(vi) their women shall not be allowed to cover the upper portion of their bodies by clothes or ravukais or thavanies;                        

(vii) their women shall not be allowed to use flowers or saffron paste; and

(viii) the men shall not use umbrellas for protection against sun and rain nor should they wear sandal.

In June 1931, the eight prohibitions not having been satisfactorily observed by the exterior castes in question, the Kallar met together and framed eleven prohibitions, which went still further than the original eight, and an attempt to enforce these led to more violence.These eleven prohibitions were :—

1. The Adi-Dravidas and Devendrakula Vellalar should not wear clothes below their knees.

2. The men and women of the above-said depressed classes should not wear gold jewels.

3. The women should carry water only in mud pots and not in copper or brass vessels. They should use      straw only to carry the water pots and no clothes should be used for that purpose.

4. Their children should not read and get themselves literate or Educated.

5. The children should be asked only to tend the cattle of the Mirasdars.

6. Their men and women should work as slaves of the Mirasdars, in their respective Pannais.

7. They should not cultivate the land either on waram or lease from the Mirasdars.

8. They must sell away their own lands to Mirasdars of the village at very cheap rates, and if they don’t do so, no water will be allowed to them to irrigate their lands. Even if something is grown by the help of rain water, the crops should be robbed away, when they are ripe for harvest.

9. They must work as coolies from 7 a.m. to 6 p.m. under the Mirasdars and their wages shall be for men RS. 0-4-0 per day and for women Rs. 0-2-0 per day.

10. The above said communities should not use Indian Music (melam etc.) in their marriages and other celebrations.

11. They must stop their habit of going on a horse in procession before tying the Thali thread in marriage and they must use their house doors as palanquins for the marriage processions, and no vehicle should be used by them for any purpose”.

Compare these prohibitions laid down by the Hindus of Ramnad with the prohibitions contained in the texts of Manu quoted earlier in this chapter against the untouchables.Is there any difference between the law laid down by Manu for the Bahayas and the conditions imposed upon the untouchables by the Kallars in 1931? After this evidence, who can doubt that the Hindu in doing what appears to be an Adharma to a non-Hindu is merely asking the untouchables to follow the Dharma as prescribed by Manu.

– Ambedkar

Page -881,882 Selected Works Of Ambedkar

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கள்ளர்கள் 1930 டிசம்பரில் தீண்டப்படாதவர்களுக்கு எட்டுத் தடைகளை விதித்தனர். இந்தத் தடைகள் மீறப்பட்டதால் தீண்டப்படாதவர்களுக்கு எதிராக கள்ளர்கள் கடும் வன்முறையைப் பயன்படுத்தினர். தீண்டப்படாதவர்களின் குடிசைகள் தீவைத்து சுட்டெரிக்கப்பட்டன; அவர்களுடைய களஞ்சியங்களும் சொத்துக்களும் நாசமாக்கப்பட்டன; அவர்களது கால்நடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கள்ளர்கள் தீண்டப்படாதவர்களுக்கு விதித்த தடைகள் வருமாறு:

        1)ஆதி-திராவிடர்கள் தங்க நகைகளையோ வெள்ளி நகைகளையோ அணியக் கூடாது.

2)ஆண்கள் முழங்காலுக்குக் கீழேயோ, இடுப்புக்கு மேலேயோ எந்த ஆடைகளையும் அணியக் கூடாது.

3)ஆண்கள் கோட்டுகளையோ, சட்டைகளைய, பனியன்களையோ உடுத்தக் கூடாது.

4)எந்த ஆதி-திராவிடரும் சிகை அலங்காரம் செய்துக் கொள்ளக் கூடாது.

5)ஆதி-திராவிடர்கள் தங்கள் வீடுகளில் மண்பாண்டங்கள் தவிர வேறு எந்தப் பாத்திரங்களையும் பயன்படுத்தக் கூடாது.

6)பெண்கள் ரவிக்கைகளோ, தாவணிகளோ அணிந்து தங்கள் உடலின் மேற்பகுதியை மூடிக்கொள்ளக் கூடாது.

7)பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்ளக் கூடாது; நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக் கொள்ளக்கூடாது.

8)ஆண்கள் வெயிலுக்கோ, மழைக்கோ குடைகளைப் பயன்படுத்தக் கூடாது; கால்களில் செருப்புகள் அணியக் கூடாது.

இந்த எட்டுத் தடைகளும் திருப்திகரமாக நிறைவேற்றப்படாததால் 1931 ஜூனில் கள்ளர்கள் ஒன்றுகூடி மேலும் பதினோரு தடைகளை விதித்தனர். இந்தக் தடைகளை அவர்கள் செயல்படுத்த முற்பட்டபோது வன்முறை முன்னிலும் கொடிய முறையில் தலைவிரித்துத் தாண்டவமாடிற்று. இப்போது கள்ளர்கள் விதித்த பதினோரு தடைகள் வருமாறு:

 1)ஆதிதிராவிடர்களும் தேவேந்திர குல வேளாளர்களும் முழங்கால்களுக்குக் கீழ் வேஷ்டி       கட்டக்கூடாது.

2)மேலே கண்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த ஆடவரும், பெண்டிரும் தங்க நகைகளை அணியக் கூடாது.

3)பெண்கள் மண்குடங்களில்தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும்; பித்தளை அல்லது வெண்கலப் பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வரக்கூடாது.

4)தண்ணீர்க் குடங்களைத் தலையில் வைத்து சுமந்து வருவதற்கு அவர்கள் வைக்கோல் சும்மாடைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, துணி சும்மாடைப் பயன்படுத்தக் கூடாது.

5)அவர்களுடைய குழந்தைகள் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளக்கூடாது.

6)குழந்தைகளை மிராசுதாரர்களின் கால்நடைகளை மேய்க்கும்படி கூற வேண்டும்.

7)ஆண்களும், பெண்களும் மிராசுதாரர்களின் பண்ணைகளில் அடிமைகளாக வேலை செய்ய வேண்டும்.

8)அவர்கள் மிராசுதாரர்களுக்கு வாரத்துக்கோ, குத்தகைக்கோ நிலத்தை சாகுபடி செய்யக்கூடாது.

9)அவர்கள் தங்கள் சொந்த நிலங்களை மிராசுதாரர்களுக்குக் குறைந்த விலைக்கு விற்று விட வேண்டும்; அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களது நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட மாட்டாது. மழை பெய்து ஏதோ சிறிது விளைந்திருந்தாலும் அது இரவோடு, இரவாக களவாடப்படும்.

10)அவர்கள் மிராசுதாரர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டும்; ஆண்களுக்கு 4 அணாவும், பெண்களுக்கு 2 அணாவும் கூலியாகத் தரப்படும்.

11)மேலே கூறிய வகுப்பினர் தங்கள் வீட்டுத் திருமணங்களின் போதோ, வேறு விசேஷங்களின் போதோ மேளவாத்தியத்தை பயன்படுத்தக் கூடாது.திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன்னர் குதிரை மீது ஊர்வலம் வருவதை அவர்கள் நிறுத்த வேண்டும்;கல்யாண ஊர்வலங்களுக்கு தங்கள் வீட்டு கதவுகளையே பல்லக்குகளாக பயன்படுத்த வேண்டும்; எந்த காரியத்துக்கும் வாகனங்களை உபயோகிக்கக் கூடாது.

( அண்ணல் அம்பேத்கர் தொகுதி 10, பக்கம் 238-240)

Advertisements

One thought on “இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கள்ளர்கள் 1930-31ல் பட்டியலின மக்களுக்கு செய்த வன்கொடுமைகள்

  1. Pingback: மனுவும் சூத்திரர்களும்-அம்பேத்கர் | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s