“உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்”

தினமணியில் வெளியான “ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்” ல் இருந்து 5kd6 திராவிட நாடு சாத்தியமா?

திராவிட நாடு சாத்தியமா என்று கருத்தறிய வழக்கறிஞர் வி.பி. ராமன் இல்லத்தில் ஒர் ஆலோசனைக் கூட்டத்தை சம்பத் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.என், ஆசைத்தம்பி, மதியழகன் ஆகிய பல முக்கியப் பிரமுகர்களும் வந்திருந்தனர். அண்ணாவுக்குக் காஞ்சிபுரத்திற்கு டிரங்கால் போட்டு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றும் அழைத்தனர். அதுவரை அண்ணாவிடம் போய் பேசுகிற பழக்கம்தான் இருந்தது. இப்போது அவரை வரச் சொல்லிக் கூப்பிடுகிற அளவுக்கு நிலைமை மாறியது. அண்ணாவும் அவசரமாகப் புறப்பட்டு வந்தார். சொல்லப்படுகிற விஷயம் சரியாக இருப்பதால் ஆலோசிப்பதில் தவறில்லை என்று கருணாநிதியின் ஆதரவாளர்களும் கருதினர்.

திராவிட நாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தமது வாதங்களை எடுத்து வைத்தார்.

Anna-cartoon-on-Dravida-Nadu-policy-1958அதனைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா, “என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதச் சொல்றே. உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்…” என்றார். உடனே சம்பத், “கிடைக்காதுன்னு தெரிஞ்சப்பிறகு அதைச் சொல்லாதது மோசடியல்லவா?” என்று கேட்டார்.

அதற்கு அண்ணா, “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என்று வெறியேற்றிவிட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா தொண்டன் படுத்துவிடுவான். அதனாலே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம்” என்றார்.

படம் : தினமணி

நன்றி தினமணி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s