நெஞ்சு பொறுக்குதில்லையே – மகாகவி பாரதியார்

6846078948_60a7ed2410_kநெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அஞ்சி யஞ்சி சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த
மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார்-மிக
துயர்படு வார்எண்ணி பயப்படுவார் (நெஞ்சு)

மந்திர வாதி யென்பார்-சொல்ல
மாத்திரத்தி லே மனக் கிலிபிடிப்பார்
யந்திர சூனியங்கள் -இன்னும்
எத்தனை யாயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டோ- ஜனம்
தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை -இவர்
அஞ்சுதரு பேயென்றேண்ணி நெஞ்சமயர்வார்(நெஞ்சு)

சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்-
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டோருவன் -வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்
அப்பாலெ வனோசெல்வான்-அவன்
ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிர்பபார்
எப்போதும் கைத்தட்டுவார்-இவர்
யாறிடத்தும் பூனைகள்போலேங்கிநடப்பார் (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் -ஒரு
கோடியென் றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு
நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)

சாத்திரங்க லொன்றுங் காணார் -பொயச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தாலும் -ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குழைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் -தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்
ஆத்திரங்க்கொன் டேயிவன் சைவன் -இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே -நிதம்
பரிதவித் தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே -இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே (நெஞ்சு)

எண்ணிலா நோயுடையார்-இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழ்ந்தைகள்போல்-பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிகொள்வார்
நண்ணிய பெருங்கலை கள் – பத்து
நாலா யிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே -இவர்
பொறியற்ற விலங்குகள் போலவாழ்வார் (நெஞ்சு)

jobs14

Advertisements

One thought on “நெஞ்சு பொறுக்குதில்லையே – மகாகவி பாரதியார்

  1. Pingback: மகாகவி பாரதியார் குறித்து காந்தி | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s