தனவந்தர்களால் என்னை ஆட்டிவைக்க முடியாது – காந்தி

Basant Kumar Birla with Mahatma Gandhi

Basant Kumar Birla with Mahatma Gandhi

: “What is the difference between your technique and that of the Communists or Socialists for realizing the goal of economic equality? “

: “The Socialists and the Communists say they can do nothing to bring about economic equality today. They will just carry on propaganda in its favour and to that end they believe in generating and accentuating hatred. They say, when they get control over the State they will enforce equality.Under my plan the State will be there to carry out the will of the people, not to dictate to them or force them to do its will. I shall bring about economic equality through non-violence,by converting the people to my point of view by harnessing the forces of love as against hatred. I will not wait till I have converted the whole society to my view but will straightway make a beginning with myself. It goes without saying that I cannot hope to bring about economic equality of my conception, if I am the owner of fifty motor cars or even of ten bighas of land. For that I have to reduce myself to the level of the poorest of the poor. That is what I have been trying to do for the last fifty years or more, and so I claim to be a foremost Communist although I make use of cars and other facilities offered to me by the rich. They have no hold on me and I can shed them at a moment’s notice, if the interests of the masses demand it.”‘

GANDHIJI’S COMMUNISM(PYARELAL),Harijan, 31-3-’46
Gandhi and Marx – K. G. Mashruwala

சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் நம்மால் பொருளாதார சம்த்துவம் உண்டாக்குவதற்கு இன்றே எதையும் செய்ய முடியாது, அதன் பொருட்டு பிரசாரம் மட்டுமே செய்து கொண்டிருப்போம் என்கிறார்கள்.அதைச் செய்தால் இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு அனுகூலமாக துவேஷத்தை உண்டாக்கவும்,ஏற்கனவே உள்ள துவேஷத்தைப் பெருக்கவும் முடியுமென்று அவர்கள் நம்புகிறார்கள்.அரசாங்கத்தில் தாம் ஆதிக்கம் பெறும் போது சம்த்துவத்தை உண்டாக்கிவிடுவோம் என்கிறார்கள் அவர்கள்.எனது திட்டத்திலோ அரசாங்கம் மக்களின் கருத்தை நடத்தி வைக்க அன்றி தன்னிஷ்டத்தைச் செய்யுமாறு அவர்களை ஏவவோ, நிர்பந்தப்படுத்தவோ செய்யாது.துவேசத்திற்கு மாறாக அன்பின் சக்திகளை ஒன்று திரட்டுவதன் மூலம் மக்களை என் கருத்தை ஏற்கும்படி செய்து, அஹிம்சையின் மூலம் நான் பொருளாதார சமத்துவத்தை உண்டாக்குவேன்.நான் சமூகம் முழுவதையும் என் வழிக்குத் திருப்பும் வரையில் காத்திராது என்னிடமிருந்து இன்றே இதை ஆரம்பித்து விடுவேன். நான் சொந்தத்தில் 50 மோட்டார் கார்கள் வைத்திருந்தாலும், என்னிடம் 10 வேலி நிலம் இருந்தாலும் நான் நினைக்கும் பொருளாதார சமத்துவத்தைக் கொணரும் எண்ணம் வைத்திருப்பதற்கு அர்த்தமில்லை என்று நான் சொல்லாமலே புரியும்.அதற்கு நான் என்னை நாட்டின் பரம ஏழைகளில் ஒருவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.கடந்த 50 ஆண்டுகளாக நான் செய்ய முயன்று கொண்டிருப்பது இதுவேயாகையால் தனவந்தர்கள் அளித்துதவும் கார்களையும் பிற வசதிகளையும் நான் உபயோகித்துக் கொண்டாலும் என்னை முதன்மையான கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொள்கிறேன்.அந்த தனவந்தர்களால் என்னை ஆட்டிவைக்க முடியாது. அவர்களோடு எனக்குள்ள தொடர்பினால் ஏழை மக்களின் நலன் பாதிக்கப்படுவது தெரிந்தால், அந்தக் கணத்திலேயே என்னால் அவர்கள் உறவை உதறித் தள்ளிவிட முடியும்.

– ஹரிஜன் 31-3-1946

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s