கருத்துச் சுதந்திரம்

எந்த வகைக் கருத்தினரும் ,சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களும் தாங்கள் சொல்வதே சரி என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாதென்று நான் திரும்பத்திரும்ப சொல்லியிருக்கிறேன்.நாம் எல்லோருமே பிழைகள் செய்யக் கூடியவர்களாகையால் நம் கருத்துக்களை அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டி வருகிறது.இதைப் போன்ற பெரிய நாட்டில் உண்மையாகவும் நாணயமாகவும் கருத்துக்கள் கொண்டுள்ள எல்லோருக்கும் இடம் இருக்க வேண்டும்.ஆகவே குறைந்தபட்சம் நம் விஷயத்திலும் பிறர் விஷயத்திலும் நாம் செய்ய வேண்டுவது எதிராளியின் கருத்தைப் புரிந்து கொள்வதும் அதை ஏற்க முடியாவிட்டாலும்,நம் கருத்தை நாம் மதிப்பதுமாகும்.செம்மையான பொது வாழ்வுக்கு இன்றியமையாத சாதனங்களில் இது ஒன்றாகையால் சுயராஜ்யத்திற்கு நமக்குள்ள தகுதியையும் இதுவே காட்டும்.நாம் தாராள புத்தியும் சகிப்புத் தன்மையும் இல்லாதிருந்தால் நம்மால் நம்மிடையே எழும் தகராறுகளை சமூகமாகத் தீர்த்துக் கொள்ள முடியாதாகையால் எப்பொழுதும் மூன்றாம் மனிதன் தீர்ப்புக்கு , அதாவது அந்நியர் ஆதிக்கத்திற்கு அடங்கியே இருக்க வேண்டியிருக்கும்.

-யங் இந்தியா,17-4-1924

OB-VM824_icenso_G_20121129033812

நாம் எதிராளி சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ள சித்தமாயில்லாவிட்டால் ஜனநாயகம் வளர்ந்து பருவம் எய்துவதே சாத்தியமல்ல.நாம் எதிராளி சொல்வதைக் கேட்க மறுக்கையிலும், கேட்டாலும் அவர்கள் சொல்வதைக் கேலி செய்கையிலும் நம் நடவடிக்கைகளில் நியாயம் புகாது தடுக்கிறோம். எதிராளியின் பேச்சை சகிக்காமலே, பொறுக்காமலே பழகிவிடுகையில் நம்மால் உண்மையை அறிய முடியாமற் போகும்.இயற்கையில் நமக்குள்ள அறிவாற்றலின் துணையால் செயல்படுகையில் நமக்கு சரியென்று தோன்றுவதை அஞ்சாமல் சொல்லவும்,செய்யவும் துணியவேண்டும்.ஆனால் நாம் உண்மையென்று நம்பியிருந்தது அவ்வாறில்லை என்று தெரிந்ததும் நம் கருத்தை மாற்றிக் கொள்ளவும்,முன்பு நினைத்தது தவறு என்று தயங்காது ஒப்புக்கொள்ளவும் வேண்டும்.இவ்வாறு செய்வதனால் நம்மிடமுள்ள உண்மை மேலும் உறுதியாவதோடு, அதிலிருந்த குறைகளும் நீக்கப்பெறும்.

 -ஹரிஜன்,31-5-1942

பேச்சு சுதந்திரம் என்பதற்கு ஒருவர் பேச்சினால் மனம் புண்ணானாலும் அதைத் தடுக்காது விடுவது என்றுதான் அர்த்தம்.பத்திரிக்கைகள் மிகவும் காரசாரமாக கருத்துக்களை வெளியிடுவதோடு நில்லாமல்,விஷயங்களைத் திரித்துக்கூறவும் விடப்படும்போது தான் அவைகளுக்கு சுதந்திரம் இருக்கிறது என்று ஆகும்.திரித்துக் கூறுவதையும்,பாலத்காரத்திற்குத் தூண்டுவதையும் தடுப்பதற்காக அவைகளுக்கு வாய்ப்பூட்டு போடவோ,அச்சகங்களையே மூடிவிடவோ செய்யாமல் பிரஸ்தாப கட்டுரைகளை எழுதியவரை தண்டிப்பதோடு நிறுத்திக்கொண்டு,அச்சகத்தை ஒன்றும் செய்யாமலிருந்து விட வேண்டும்.மக்கள் கூட்டங்களில் கூடி புரட்சிகரமான திட்டங்களைப் பற்றி விவாதிப்பதற்கும் அனுமதிக்கப்படும் போது தான் கூட்டம் கூடும் சுதந்திரம் உண்மையில் மதிக்கப்பட்டதாகும்.

– யங் இந்தியா,12-1-1922 (LIBERTY OF THE PRESS)

சுதந்திரம் என்பது என்ன ? சுதந்திர சமூக அமைப்பில் அது ஏன் இன்றியமையாததாகிறது ? சுதந்திரம் இரு வகைப்படும்: சிவில் மற்றும், அரசியல் உரிமை. 1. சிவில் உரிமை என்பது சுதந்திரமாக இயங்கும் உரிமை. சட்டமுறைப்படியன்றி வேறுவகையில் சிறைப்படுத்த முடியாத நிலை 2. பேச்சுரிமை – சிந்தித்தல், எழுதுதல், படித்தல், விவாதித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 3. செயலுரிமை.

முதல் வகை சுதந்திரம் அடிப்படையானது. அடிப்படையானது மட்டுமன்று, அது இன்றியமையாததும்கூட. அதன் மதிப்பைப் பற்றி அய்யம் எதுவும் இருக்க முடியாது. இரண்டாவது வகைச் சுதந்திரத்தை கருத்துச் சுதந்திரம் எனலாம். பல காரணங்களுக்காக அது முக்கியமானது. சமூக, அரசியல், தார்மிக, அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கும் காரணமாவது. கருத்துச் சுதந்திரம் இல்லாத இடத்தில் சமூக நிலையில் மாற்றமின்றி ஒரே விதமாகவே இயங்கும். இதனால் மிகவும் அவசியமானவையாக இருப்பினும் கூட, புதுமையானவை அனைத்தும் நிராகரிக்கப்படும். செயல் உரிமை என்பது தான் நினைத்ததைச் செய்யும் உரிமை. செயலுரிமை ஏட்டளவில் இருந்தால் மட்டும் போதாது; அது உண்மையானதாகவும் இருத்தல் வேண்டும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 95)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s