மகாத்மா ஜோதிராவ் புலே மறைந்த தினம்

IMG_0020
மலர்வு :- ஏபரல் 11 , 1827 கட்குன் || மறைவு :- நவம்பர் 28,1890 பூனே

இந்திய சமூக புரட்சியின் தந்தை மகாத்மா ஜோதிராவ் புலே மறைந்த தினம் இன்று.இவரின் பரம்பரையினர் மலர்களை பேஷ்வாக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருந்த வழக்கம் உடையது. இயல்பாக போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்வில் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் சில பார்ப்பனர்கள் அவரை கீழான சாதியைச் சேர்ந்தவர் எனச்சொல்லி அவமானப்படுத்தி வெளியேற்றிய நிகழ்வு மாற்றத்தை உண்டு செய்தது .ஏகத்துக்கும் வாசிக்க ஆரம்பித்தார் ; மேற்குலகின் நூல்களை படித்தார் .தாமஸ் பெய்னின் மனிதனின் உரிமைகள் நூல் அவரை ஈர்த்தது.

வேதங்களை படித்து அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் சார்ந்து கேள்விகள் எழுப்ப ஆரம்பித்தார். அவர் தன்னுடைய கட்டுரைகள் எழுத்துகளில் எங்கேயும் இந்து என்கிற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை -பார்ப்பனியம் என்றே குறித்தார்.உடல் உழைப்பை கொட்டித்தரும் மக்களை சூத்திரர் என பாகுபடுத்தி சோம்பிக்கிடக்கிற வேலையை தான் பார்ப்பனகள் செய்கிறார்கள் என்றார்.1857 விடுதலைப்போரை உயர் சாதிகளின் செயலாகவே அவர் பார்த்தார்.

அவரின் ‘அடிமைத்தனம்’ புத்தகம் பெரிய அலைகளை உண்டு செய்தது. அதைப்பற்றி செய்தி வெளியிடவே இதழ்கள் யோசித்தன. மண்ணின் உண்மையான மக்களான சூத்திரர்களை ஒதுக்கிவிட்டு வெளியே இருந்து வந்த பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; மக்களின் அறியாமையை முதலீடாகக் கொண்டு வஞ்சகத்தால் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று அவர்கள் இழைத்த அநீதிகளை எழுதினார் புலே. அந்நூலில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் நூறில் ஒரு பங்கை கூட பதிவு செய்யவில்லை என்று சொன்னார். அந்நூலை அமெரிக்காவில் கருப்பின மக்களின் விடுதலைக்கு பாடுபட்டவர்களுக்கு அர்ப்பணித்தார்.

பரசுராமனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுகிறார் புலே. இயல்பாக பகடி செய்து செல்லும் அந்த கடிதம்
Lord-Parashuram
பெறுநர் : சிரஞ்சீவி பரசுராமன்
தந்தை பெயர் : ஆதி நாராயணன்
இடம் : எங்கும் பார்க்கலாம்

அன்பு அண்ணன் பரசுராமன் அவர்களுக்கு,

பார்ப்பனர்களின் மூலமாக உலகுக்கு சொல்லப்படும் உங்கள் மந்திரங்களின் அற்புதங்களை நீங்கள் நேரடியாகவே செய்து காட்டி இந்த ஆங்கிலேயரையும் பிரெஞ்சாரையும் வாயடைக்க செய்ய வேண்டும். என்னைத் தவிர்க்கவோ என்னிடம் இருந்து தப்பிக்கவோ முயல வேண்டாம். இந்த அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் தாங்கள் ஆஜராக வேண்டும். அப்போது நான் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களும் உங்களை எங்கும் நிறைந்த ஆதிநாராயணனின் அதிகாரபூர்வ அவதாரம் என மதிப்போம்.

அப்படிக் காட்சியளிக்க தாங்கள் தவறினால் இந்த நாட்டின் மகர்களும் மாங்குகளும், சகலகலாவல்லவர்கள் என அழைத்துக் கொள்ளும் உங்கள் பார்ப்பன பக்தர்களின் உண்மையான லட்சணத்தை அம்பலப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை அன்புடன் அறியவும்.

இப்படிக்கு
தங்களைப் பற்றிய பிரச்சாரப் பெருமையின்
நிஜத்தை சோதிக்க விரும்பும்
ஜோதிராவ் கோவிந்தராவ் புலே

கல்வி அறிவை தராமல் மக்களை ஒடுக்கும் வேலையை செய்த இந்து மதத்தின் காவலர்களை பகடி செய்தார் .‘சத்திய சோதக் சமாஜ்’ எனும் அமைப்பை உருவாக்கி செயல்பட ஆரம்பித்தார் . சூத்திரர்கள் மற்றும் ஆதி சூத்திரர்கள் என சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்காக அவ்வமைப்பின் மூலம் செயலாற்றினார். ஒரு மதத்தை விட்டு வெளியேறி அதை விமர்சிப்பதை விட அதை உள்ளிருந்தே அதன் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.ஒடுக்கப்பட்ட மக்களின் இழிநிலை போக கல்வியறிவே சிறந்த கருவி என உணர்ந்தார் .தன் மனைவி சாவித்திரிபாய் புலே உடன் இணைந்து பெண்களுக்கான முதல் பள்ளியை தொடங்கினார் .

உயர் ஜாதி மக்கள் கலவரம் செய்தார்கள் ;போகிற பொழுது சாவித்திரியின் மீது கல்லெறிந்தார்கள். சனாதானிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து புலேவின் தந்தை அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார். என்றாலும் தன் கொள்கையில் இருந்து விலகாமல் உறுதியாக நின்றார் .பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாக ஆரம்பித்தது 1851 ஜூலையில் நல்புதாவர் பேத்திலும், 1851 செப்டம்பரில் ராஸ்தா பேத்திலும், 1852 மார்ச்சில் விதல் பேத்திலுமாக பெண்கள் கல்விக்கூடங்களை நிறுவினார் ஜோதிராவ்புலே.

சாவித்திரி பாய் அக்கல்விக்கூடங்களில் முதல் பெண் ஆசிரியராக ஆனார்.நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் புலம்பியதும் “அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ !பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் !”என்றார் அவ்வாறே செய்தார்.

பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது ;அந்தப் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார். ஆங்கிலேய அரசாங்கம் எண்ணற்ற மதுக்கடைகளை திறந்து விட உரிமம் கொடுத்த பொழுது அது எளிய மக்களை பாதிக்கும் என்று அதை தீவிரமாக எதிர்த்தார். ஒருமுறை ஆங்கிலேய கனவான்களுக்கான நிகழ்வில் கலந்து கொள்ள ஏழை விவசாயிப்போல ஆடை அணிந்து போனார். “இந்தியாவின் உண்மையான சூழலைப்புரிந்து கொள்ள இந்த மாளிகைகளில் விருந்து உண்ணாதீர்கள் ! கொஞ்சம் கிளம்பி வந்து கிராமங்களை பாருங்கள் !” என்று முழங்கினார்

அவரின் பார்வை இன்றைக்கும் அவசியமாக இருப்பதை இவ்வரிகளே காட்டும் ,”தற்போதைய சமூக முறையை மாற்ற வேண்டுமானால், பிறரை சார்ந்திருத்தல், கல்லாமை, அறியாமை, ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க முடியும். மூட நம்பிக்கை ஒழிப்பே சமூக- பொருளாதார மாற்றங்களுக்குக்கு வழிகோலும்” அவரை நினைவு கூர்வோம்

பூ.கொ.சரவணன்

Wiki :: Jyotirao Phule
Slavery
Jotirao Phule: Shetkaryaca Asud translated by Gail Omvedt and Bharat Patankar
Jyotirao Phule by Tarkateertha Laxmanshastri Joshi
Mahatma Jyoti Rao Phule’s Full Life History – Video

Advertisements

3 thoughts on “மகாத்மா ஜோதிராவ் புலே மறைந்த தினம்

  1. இன்றைய சமூகத்துக்கு மிகவும் தேவையான வலைப்பூ. இந்திய வரலாறு அதிகம் பேசாமல் விட்டுவிட்ட மனிதர்களையும் வெளிச்சமிடும் உங்களின் பணி மகத்தானது.

  2. Happy to know about mahatma jyotirao Phule.

    Sorry to say, How can i say I am a literate?.

    we are illiterate as for as social knowledge is concerned . What a revolutionary leader, I am unaware about this leader till now. Why there was no popularity for this leader?.

    It is a planned sin. The real mahatma was masked by a group.

    I will spread the truth.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s