சி.வி.ராமன் நினைவு தினம்

cv-ramans

மலர்வு :- நவம்பர் 7, 1888 திருவானைக்காவல் || மறைவு :- நவம்பர் 21, 1970 பெங்களூரு

திருவானைக்காவலில் பிறந்த இவர் ;படு சுட்டியாக படிப்பில் இருந்தவர். அப்பொழுதே ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்க பதக்கம் பெற்றவர்;முதலில் அக்கவுண்டண்டாக அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்தவர் இரவெல்லாம் ஆய்வுகள் செய்வார் .பின் இணை பேராசிரியராக கல்கத்தா பல்கலைகழகத்தில் இருக்கிற பொழுது ஹவுராவில் எளிய பொருட்களை வாங்கிவந்து சிக்கனமாக பல கருவிகளை உருவாக்கி பயன்படுத்துவார் ; மெடிடேரியன் கடலின் ஊடாக பயணம் போகிற பொழுது ஏன் கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருக்கிறது என யோசித்ததன் விளைவு தான் ராமன் விளைவு நோக்கிய அவரின் பயணம் .

காம்ப்டன் எக்ஸ் கதிர்கள் சிதறலை பற்றி ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னதும் அது என் கண்ணிற்கு புலப்படும் ஒளியிலும் சாத்தியமாக இருக்க கூடாது என யோசித்தார் ;அதற்கு விலை மிகுந்த ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியை பிர்லாவிடம் வாங்கித்தர சொல்லி கேட்டார் ,”கண்டிப்பா நோபல் பரிசு நமக்குதான் !”என அறிவித்து களத்தில் இறங்கி சாதித்து காட்டினார் இவர்.

ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது;

இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது எனவும் கண்டார் /அவை படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;(ஆற்றல் இழப்பு இல்லை) முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;(ஆற்றல்இழப்பு) முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்;(ஆற்றல் அதிகரிப்பு) இதை கண்டுபிடித்த ராமன் இதை சாதித்தது மிகப்பெரிய ஆய்வகங்களில் இல்லை. கல்கத்தாவின் எளிய அரசாங்க அலுவலகத்தின் தட்டுமுட்டு சாமான்களுக்கு நடுவே தன் தீரா வேட்கையால் சாதித்தார். நோபல் பரிசை அறிவியல் துறையில் பெற்ற முதல் ஆசியர் என்கிற பெருமை அவரை வந்து சேர்ந்தது ;ஜூலை மாதமே நோபல் பரிசு தனக்குத்தான் என உறுதியாக நம்பி டிக்கெட் எல்லாம் புக் செய்தார் ராமன் .ஆங்கிலேய அரசு அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க அவருக்கு வரவேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்க செய்தது. மீறி அது அவர் கைக்கு போய் சேர்ந்தது. ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக்கூடாது என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே போய்,”ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலை தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு இவ்விருது சமர்ப்பணம் !” என்று கம்பீரமாக சொல்லியே தன்னுரையை வழங்கினார் ராமன்.ராமன் விளைவு பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ,போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல்,அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்து ஆய்வு செய்தல் ஆகியவற்றில் பயன்படுகிறது . இவரின் கவனிப்பில் இந்திய அறிவியல் கழகம் சிறப்பான அமைப்பாக உருவெடுத்தது. நம் நாடு அறிவியலில் முன்னணியில் நிற்க குழந்தைகளை ஐந்து வயதில் இருந்தே விஞ்ஞானிகள் என மதித்து நடத்த வேண்டும் என்ற இவரின் கனவு இன்னமும் கானல் நீராகவே இருக்கிறது .அவர் ராமன் விளைவை கண்டுபிடித்த பிப்ரவரி 28 தேதியை அரசு தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறது.

பூ.கொ.சரவணன்

Wiki :: National Science Day

Raman with Gandhi

Discussion with C. V. Raman & Lady Raman [Before May 31, 1936] – CWMG

Raman’s speech was a masterpiece …Raman mentioned that he had received a telegram of congratulations from his very dear friend ‘who is now in jail’ from C.V. Raman: A Biography By Uma Parameswaran

Advertisements

2 thoughts on “சி.வி.ராமன் நினைவு தினம்

  1. ராமன் விளைவின் பயன்பாடுகளும், சி. வி. ராமன் அவர்களின் மற்ற ஆய்வுகள் மற்றும் அவரின் வாழ்க்கைக் குறிப்புகள் கொண்ட கட்டுரை http://www.frontline.in/static/html/fl2205/stories/20050311000908600.htm

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s