காந்தியின் மறைவு குறித்து பெரியார்

floweredஇந்தியாவுக்கு ‘ஹிந்துஸ்தான்’ என்கிற பெயருக்குப் பதிலாக ‘காந்திதேசம்’ அல்லது ‘காந்திஸ்தான்’ என்று பெயரிடலாம். இந்துமதம் என்பதற்குப் பதிலாக ‘காந்திமதம்’ அல்லது காந்தினிசம்’ என்பதாக மாற்றப்படலாம். … கிறிஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக ‘காந்தி ஆண்டு’ என்று துவக்கலாம். இப்படிப்பட்ட காரியங்கள் செய்வதனால்தான் புத்தர், கிறிஸ்து, முகமது முதலிய பெரியார்களுக்கு காந்தியார் ஒப்பானவராகவும், இன்றைய நிலைமைக்குத் தோன்றிய ஓர் சீர்திருத்த மகானாகவும் உலகமே கருதும்படியான நிலை ஏற்படும். உலக மக்களால் நன்கு மதிக்கப்படுவோம். இந்தியாவுக்கே சாபக்கேடு எது எது சொல்லிவரப்பட்டதோ அதெல்லாம் மறைந்துவிடும்.’’ – குடியரசு 14-2-1948 ‘‘பேச வேண்டியது, சம்பிரதாயப்படி மாத்திரம் அல்லாமல் உண்மைப்படியும், கடமைப்படியும் பேச வேண்டியதாகும். காந்தியார் மறைவு திராவிட நாட்டுக்கும் திராவிட மக்களுக்கும் மகத்தான நட்டமும், மாபெரும் ஏமாற்றமடையத்தக்க வாய்ப்புமாகும். காந்தியார் கொலை திராவிட மக்களின் எல்லையற்ற ஆத்திரமும் இரத்தக்கொதிப்பும், திடுக்கிடும்படியான விறுவிறுப்பையும் கொள்ளத்தக்க காரியமாகும்.’’ – குடியரசு 15-5-1948 (நன்றி ::  தமிழ்இந்து  ) 31.01.1948 அன்று திருச்சி வானொலியில் காந்தியின் மறைவு குறித்துப் பேசும் போதும் காந்தியின் சிறப்புகள் குறித்துப் பேசினாரேயல்லாது. பார்ப்பன எதிர்ப்பு குறித்துப் பேசவில்லை. 12.02.1948அன்று காங்கிரசார் ஏற்பாடு செய்த ‘காந்தியார் அனுதாபக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தவர்களும் கலந்துகொள்ளலாம்’ என்று அனுமதியளித்த பெரியார், ‘அக்கூட்டங்களில் பேச நேர்ந்தால், அனுதாபம் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு எந்தவிதமான கட்சிப்பேச்சுப் பேசாமல் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்’ என்றும் கட்டளை பிறப்பித்தார். 19.02.1948 அன்று நன்னிலம் அருகிலுள்ள சன்னாநல்லூரில் காந்தி இறந்தபிறகு நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் பெரியாரும்  மு.கருணாநிதியும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். அப்போது மு.கருணாநிதி கோட்சேயின் பார்ப்பன அடையாளம் குறித்து ஆவேசமாகப் பேசும் போது, பெரியார் பேச்சை இடைமறித்து, ‘காந்தியைக் கொன்றது ஒரு துப்பாக்கி, அவ்வளவுதான்’ என முடித்து வைத்தார். (இந்த சம்பவத்தை மு.கருணாநிதியே பலமுறை தனது உரைகளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எழுதிய ‘உலகத்தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு பாகம்2’ல் இது ‘விடுபட்டுள்ளது’) (நன்றி :: கீற்று )

Advertisements

2 thoughts on “காந்தியின் மறைவு குறித்து பெரியார்

  1. Pingback: இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார் | இராட்டை

  2. Pingback: பெரியாரை அணுகுவது எப்படி ? | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s